11 நாளா நடுக்கடலில் மிதந்த Freezer.. "பக்கத்துல போனதுக்கு அப்புறம் தான் விஷயமே தெரிய வந்துருக்கு".. திகில் கிளப்பிய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Romualdo Macedo Rodrigues. 44 வயதாகும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக Oiapoque என்னும் பகுதியில் இருந்து மரப்படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காக கிளம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

Also Read | மகனுடன் கிரிக்கெட் ஆடும் ரெய்னா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.. நடிகை ஸ்ருதிஹாசன் போட்ட கமெண்ட்!!

அவர் அடுத்து சில நாட்கள் கடலில் மீன் பிடிக்க திட்டம் போட்டிருந்த நிலையில் தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

Rodrigues சென்ற படகு, திடீரென தண்ணீரை அதிகம் எடுத்துக்க கொள்ளவே அது நீரில் மூழ்க ஆரம்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் Rodrigues முழித்த நிலையில், கடலுக்கு நடுவே தான் படகில் வைத்திருந்த ஃப்ரீசர் ஒன்றிற்குள் ஏறி அமர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படியே சுமார் 11 நாட்கள் அந்த ஃப்ரீசருக்குள் உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார் Rodrigues. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், 11 நாட்கள் கழித்து அவரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

11 நாட்கள் அப்படியே இருந்ததால், நீரிழப்பு ஏற்பட்டு கிழிந்த உடையுடன் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இருந்ததால், Sun Stroke ஏற்பட்டு கடுமையாகவும் Rodrigues அவதிப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், 11 நாட்களில் மொத்தம் 5 கிலோ எடை அவர் குறைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் பற்றி பேசும் Rodrigues, "என்னை மிகவும் தொந்தரவு செய்தது தாகம் தான். அந்த ப்ரீசர் என்னுடைய தெய்வம். ஒரு அற்புதம் தான் நடந்துள்ளது. கடலில் மீன்கள் நிறைய இருந்ததால், நான் சுறா மீனால் தாக்கப்படுவேன் என்றும் பயந்து போனேன். அப்போது படகு ஒன்று அருகே வரும் சத்தம் கேட்டது. அவர்கள் மெதுவாக என்னை நெருங்கி வந்தார்கள். பின்னர், என் கையை உயர்த்தி உதவி கேட்டேன்" என கூறி உள்ளார்.

Rodrigues மீட்கப்பட்ட பிறகு, அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அதிக வெப்பம், உப்பு மற்றும் வெளிச்சம் காரணமாக பார்வை குறைபாடுகள் ஏற்பட்டதாகவும், அதே வேளையில் மீட்கப்பட்ட சமயத்தில் அவர் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், உரிய ஆவணங்கள் இல்லமால் அப்பகுதியில் சுற்றித் திரிந்தால் முதலுதவி சிகிச்சைக்கு பின், Rodrigues கைது செயப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூற[ப்படுகிறது. 11 நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாமல், நடுக்கடலில் தத்தளித்த நபர் உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு, பலரையும் வியக்க வைத்துள்ளது.

Also Read | காதலியை பிரிஞ்ச இளைஞர்.. அடுத்த கொஞ்ச மாசத்துல நண்பர் சொன்ன விஷயம்.. "அத கேட்டதும் ஏன்டா Break up பண்ணோம்ன்னு ஆயிடுச்சு"

MAN, BEACH, SURVIVE, FREEZER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்