மனைவிகள் சம்மதம் வாங்கியே '5' கல்யாணம்.. ஒரே வீட்டுல 62 பேர்.. மகிழ்ச்சியாக வாழும் நபர்!!..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தை சுற்றி ஏராளமான விஷயங்கள் வைரலாகும். அதில் சில விஷயங்களை நாம் கேள்விப்படும் போது, அப்படியே நம்மை ஒருவித வியப்பில் தான் அந்த செய்தி மூழ்க வைக்கும்.

Advertising
>
Advertising

Also Read | "தம்பி கோட்டுக்கு உள்ள வாங்க.. செஞ்சிட போறேன்".. SA வீரருக்கு சஹார் கொடுத்த வார்னிங்.. சேட்டையான வீடியோ..!

அப்படி ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் சவுகத். இவர் தனது குடும்பத்தினரான மொத்தம் 62 பேருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சவுகத்திற்கு மொத்தம் 5 மனைவிகள் உள்ளனர். மேலும், மொத்தமாக சவுக்கதிற்கு 11 பிள்ளைகளும் உள்ளனர். இதில் 10 மகள்களும், ஒரு மகனும் அடங்கும். இது தவிர, 40 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இப்படி மொத்தம் 62 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் சவுகத். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐந்து மனைவிகள் இருந்த போதிலும் அவர்களுக்கு இடையே சண்டை எதுவும் இல்லை என்பது தான்.

அதே போல, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், முந்தைய மனைவிகளின் சம்மதம் பெற்று தான் அத்தனை திருமணங்களையும் சவுகத் செய்து வந்துள்ளார்.  இணையத்திலும் இது தொடர்பான செய்தி, அதிகம் பேசு பொருளாக மாற தொடங்கியது.

சவுகத் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முன்பாகவே, அவரது ஒரே மகனுக்கும், ஒரு சில மகள்களுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது இரண்டு மகள்களின் வற்புறுத்தலின் பெயரில் தான், ஐந்தாவது திருமணம் செய்ய சவுகத் சம்மதம் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அதே போல, தனது கணவர் ஐந்தாவது திருமணம் செய்து கொள்வதற்கு மனைவிகளில் ஒருவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுகத் வீட்டில் ஒரு வேளை உணவுக்காக, 100 ரொட்டிகளுக்கு மேல் தயார் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற மனைவி அல்லது மனைவிகளின் சம்மதத்துடன் ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டு, 62 பேருடன் ஒரே வீட்டில் சந்தோசமாக வசித்து வரும் நபர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Also Read | சிராஜ் செஞ்ச விஷயத்தால்.. கடுப்பில் மொறச்ச ரோஹித்.. "தீபக் கூட டென்சன் ஆயிட்டாரு".. பரபரப்பு!!

PAKISTAN, MAN, MARRIES, WIVES, WIVES PERMISSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்