28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு? மீண்டும் வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது மனைவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பேரக்குழந்தைகளுக்கு முன்பாக வயதான நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | என்னங்க சொல்றீங்க..? ஒரு சிப்ஸ் இவ்வளவு லட்சமா?.. விலையை கேட்டாலே கண்ணைக் கட்டுதே.!

திருமணம்

சமூக வலைத்தளங்களில் வினோதமான விஷயங்களை தேடித்தேடி ரசிப்போர் மிக அதிகம். அதன் காரணமாகவே பலரும் வித்தியாசமான வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வயதான தாத்தா ஒருவர் 37 வது முறையாக திருமணம் செய்துகொண்டதாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வருடம் பகிர்ந்திருந்தார். அதில்,"மிகவும் வீரமான ஆண். தனது 28 மனைவிகள், 135 மகன்,மகள்கள் மற்றும் 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37 வது திருமணம் செய்துகொள்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் வைரலாக இணையதளங்களில் பரவிவந்த இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

கமெண்ட்கள்

இந்த திருமணம் எங்கே நடைபெற்றது? தம்பதியின் பெயர்கள் என்ன என்பது தெரியவில்லை. கும்பலாக மக்கள், சூழ்ந்து கூச்சலிட்டு, அதன் பின்னர் மணமகள் போல அலங்கரிக்கப்பட்ட பெண்ணை அம்மக்கள் கட்டியணைத்து முத்தமிடுகிறார்கள். இது திருமணம் தானா? அல்லது  ஏதேனும் நிகழ்வை நெட்டிசன்கள் இப்படி பரப்பி வருகின்றனரா? என்பது தெரியவில்லை.

கடந்த வருடம் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலை தளங்களில் வைரலாகவே நெட்டிசன்கள்,"உண்மையாகவே இவர் மகத்தான வீரர்" என்றும் "எனக்கு ஒரு கல்யாணம் கூட நடைபெறவில்லை" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

MAN, MARRY, MAN MARRIES 37TH TIMES, திருமணம், தாத்தா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்