"வாழ்ந்தா மூணு பேரு கூட தான்".. ஒரே வீட்டில் 3 மனைவிகள்.. சண்டையே போடாம சந்தோசமா வாழும் மனுஷன்.. "யாரு சாமி நீ??"
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் அவ்வப்போது பல நிஜ நிகழ்வுகள் தொடர்பான வினோத செய்திகள் அதிகம் ரவுண்டு அடிக்கும்.
அதில் சிலவற்றை நாம் கேள்விப்படும் போது நிச்சயம் நமக்கு அதிக அளவில் வியப்பை கொடுக்கும் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.
அப்படி ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
காங்கோ குடியரசு என்னும் நாட்டை சேர்ந்தவர் Ombeni. இவர் மொத்தம் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார். இதில், இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பெண்களும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது தான். கிறிஸ்டினா என்ற பெண்ணை முதலாவதாக Ombeni திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டினாவின் சகோதரியான ஈலின் என்பவரையும் திருமணம் செய்ய Ombeni விருப்பம் கொண்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரியையே கணவர் திருமணம் செய்ய விரும்பிய போதும், கோபப்படாத மனைவி கிறிஸ்டினா, இதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மூன்றாவது சகோதரியான டூமா என்பவரையும் Ombeni திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் Ombeni வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே இதுவரை எந்த விஷயத்திலும் சண்டை ஏற்பட்டதே இல்லை என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசும் முதல் மனைவி கிறிஸ்டினா, இதை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களின் கணவர் சிறந்த முறையில் அனைவரையும் பார்த்துக் கொள்வதுடன் சமமாக அன்பை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Ombeni மற்றும் மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 14 பேரும், Ombeni குடிசை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் அனைவருக்காகவும் தனியாளாக Ombeni உழைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனக்கு மூன்று மனைவிகள் இருப்பது பற்றி பேசும் Ombeni, என்னை பற்றி மக்கள் பலரும் பல விதமாக கருத்து கூறுகிறார்கள் என்றும், ஆனால் நாங்கள் அது எதையும் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம் என்பது தான் எங்களுக்கு முக்கியம் என்றும் Ombeni குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மனைவிகள் இருந்த போதிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி, அனைவருடனும் இணக்கமாக வாழ்ந்து வரும் கணவர் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!
- 6 ஆவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்.. 7 ஆவது திருமணத்திற்கு ரெடி ஆன பெண்.. கட்டம் கட்டி தூக்கிய 6 ஆவது கணவர்
- "சேர்த்து வைங்க"... கணவரை தேடி வந்து கண்ணீர் சிந்திய முன்னாள் காதலி.. முன்னின்று கல்யாணமே பண்ணி வைத்த மனைவி.!
- "கல்யாணம் ஆகி 8 வருசம் கழிச்சு".. கணவர் பத்தி மனைவிக்கு தெரிஞ்ச 'உண்மை'.. "இத கண்டுபிடிக்கவே எனக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு"
- "கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே".. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி.! அதுக்கு அப்றம் நடுரோட்லயே நடந்த பரபரப்பு சம்பவம்.!
- வெளிநாட்டில் இறந்த கணவர்.. உடலை கேட்டு கதறும் மனைவி.. "இன்னும் எத்தனை அரியநாச்சிகள் வேண்டும்..??" - கொந்தளித்த க/பெ ரணசிங்கம் இயக்குனர்.!
- மொத்தமா 15 மனைவிகள்.. 107 குழந்தைங்க.. "இத்தனை கல்யாணம் பண்ணது ஏன்? அதிரவைத்த காரணம்..
- கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"
- திருமணம் தாண்டிய உறவு.. பல நாட்களாக காணாமல் போன பெண்.. கணவருக்கு வந்த அழைப்பில் காத்திருந்த 'அதிர்ச்சி' தகவல்!!
- "வேலைக்குதான் போறதில்ல.. சமைக்க help பண்லாம்ல.." மனைவியின் கேள்வியால் கடுப்பான கணவன்.. கொஞ்ச நேரத்துல ஊருக்கே அதிர்ச்சி ..!