2 பெண்கள், 8 குழந்தைகளுடன்.. ஒரே வீட்டில் வாழும் நபர்.. அடுத்ததா போட்டுள்ள பிளான்.. வைரல் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் கால்பந்து வீரர் ஒருவரின் தற்போதைய வாழ்க்கை தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 2.5 வருஷத்துக்கு பிறகு தரையிறங்கிய ஆளில்லா விண்வெளி விமானம்.. வரலாற்றில் புதிய சாதனை.. முழு விபரம்..!

முன்னாள் அமெரிக்க கால்பந்து வீரர் மசாயா லெஜண்ட் ஆண்ட்ரூ. இவர் தற்போது இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறார்.

முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்டெபனி என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மசாயா மற்றும் ஸ்டெபனி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி நெருங்கி பழகி வந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு பிறகு இவர்கள் பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில் சில தினங்கள் கழித்து அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பிரிந்ததாகவும் தெரிகிறது. இதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ரோசா என்ற பெண்ணுடன் ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் இடையே காதலும் உருவான நிலையில், ஒரே வீட்டில் சேர்ந்து மசாயா மற்றும் ரோசா ஆகியோர் வசித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, ஸ்டெபனியுடன் மீண்டும் ஆண்ட்ரூவுக்கும் பழக்கம் உருவாகி காதலாகவும் மாறி உள்ளது. ஒரு பக்கம் ரோசா, மறுபக்கம் ஸ்டெபனி என ஆண்ட்ரூவுக்கு நிலைமை உருவான நிலையில், மூன்று பேரும் ஒரே வீட்டில் இணைந்து ஒன்றாக வாழவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரே நபருடன் இரண்டு பெண்கள் இணைந்து வாழ ஆரம்பித்த போது, தொடக்கத்தில் சற்று சிக்கலும் ஸ்டெபனிக்கு உருவாகி உள்ளதாக தெரிகிறது. ஒரே வீட்டில் இன்னொரு பெண்ணுடனும் ஆண்ட்ரூ இருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அவருக்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், ஒரு சில ஆண்டுகள் கடந்ததும் அனைத்து சிக்கல்களும் மாறி, ஆண்ட்ரூ, ரோசா, ஸ்டெபனி ஆகியோர் சந்தோசமாக வாழ தொடங்கி உள்ளனர்.

அதே போல, தற்போது ஸ்டெபனி மற்றும் ரோசா ஆகியோர் மூலம், 8 குழந்தைகளுக்கும் தந்தையாகி உள்ளார் ஆண்ட்ரூ. இதனையடுத்து, 9 வது குழந்தையும் பிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 9 வது குழந்தையை வரவேற்க மூவரும் தயாராக இருக்கும் நிலையில், மூன்றாவது ஒரு பெண்ணை அந்த குடும்பத்திற்குள் கொண்டு வர ரோசா மற்றும் ஸ்டெபனி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!

MAN, LIVE, TWO PARTNERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்