‘ப்ரீ்சரில்’ இருந்து வீசிய ‘துர்நாற்றம்!’.. ‘ஈரக்குலையை’ நடுங்க வைக்கும் ‘பதைபதைப்பு’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிழக்கு லண்டனில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய ஒருவரை போலீஸார் தேடி வந்தபோது, அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியது.  அப்போது அங்கு இருந்த ப்ரீசர் ஒன்றில் ஈக்கள் மொய்ப்பதை பார்த்த போலீஸார், பூட்டப்பட்டிருந்த அந்த ப்ரீசரை திறந்து பார்த்து நடுங்கிப் போயினர். காரணம் அதில் 2 இளம் பெண்களின் சடலங்கள் திணித்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அந்த ஃப்ரீசரில் மின்சாரம் தடை பட்டிருந்ததால், அந்த இளம் பெண்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.  கொலைசெய்யப்பட்டு இறந்துபோன இளம் பெண்களுள் ஒருவரான  Henriett Szucs-ஐ கடந்த 2016 நவம்பரிலும்,  கொலைசெய்யப்பட்டு இறந்துபோன இன்னொரு பெண்ணான Mihrican Mustafa-வை கடந்த 2018 மே மாதத்திலும் இந்த பெண்களை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட zahid younis என்கிற நபரது வீட்டில் கண்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2016-ஆம் ஆண்டு ப்ரீசரை வாங்கியுள்ளார் zahid younis. அதாவது 2016ல்  Henriett Szucs-ஐ கொலை செய்ததும் அவர் இந்த ப்ரீசரை வாங்கியிருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் Mustafa-வையும் கொலை செய்த பிறகு இருவரையும் ப்ரீசரில் வைத்திருக்க வேண்டும் என்றும் கண்டறிந்த போலீஸார், இரண்டு பேருமே அடித்து சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதையும், அந்த வீட்டில் அந்த பெண்களின் பொருட்கள் மற்றும் கைரேகைகளையும் கண்டுபிடித்துள்ளனர். 

இடையில் மின்சாரம் தடைபட்டு ப்ரீசரில் இருந்த சடலங்கள் அழுகியதனால், துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், zahid younis வேறு வீட்டில் வாழத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட zahid younisக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்பதால், விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்