'மனைவியைக் காப்பாற்ற நடந்த சண்டை'... 'ஆனா மனுஷன் கூட இல்ல'... 'உயிரைப் பணயம் வைத்த கணவன்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எனக்காக எதையும் செய்வீர்களா என்ற கேள்வியைப் பல மனைவிமார்கள் கேட்கும் போது, உனக்காக எதையும் செய்வேன் எனக் கணவன்மார்கள் கூறுவது வழக்கம். அந்த வகையில் மனைவிக்காகத் தனது உயிரையே கணவன் ஒருவர் பணயம் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிகள் தான் சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி. இந்த தம்பதியினர் நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் டாய்ல் தாக்கப்பட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத அவர் கதறித் துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷெல்லி, உடனே சுறா மீது குதித்து அதனைக் குத்தி மனைவியைச் சுறாவிடம் இருந்து காப்பாற்றினார்.
உடனே மருத்துவக்குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் டாய்லுக்கு முதலுதவி அளித்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். டாய்லுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு போர்ட் மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனைவியைக் காப்பாற்றியது குறித்துப் பேசிய ஷெல்லி, ''என் மனைவி தான் எனக்கும் எல்லாம். அவளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன்'' எனக் கூறினார். தனது உயிரைப் பணயம் வைத்து சுறாவைத் தாக்கி மனைவியை மீட்ட ஷெல்லிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்!
- 'உப்பில் ஆரம்பித்த தகராறால்'... 'ஆத்திரம் தலைக்கேறிய கணவர் செய்த நடுங்கச்செய்யும் காரியம்'... 'நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்'...
- Route பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நபருக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!.. எதைக் கண்டுபிடித்தார் தெரியுமா?
- 'ஊர நம்ப வைக்கணும்னா...' 'என் கணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க...' 'கூலிப்படை வருவதற்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி...' - நடுங்க செய்யும் பயங்கரம்...!
- 'தோளில் 400 கிலோ எடை'... 'ஜெயிச்சிருவாருன்னு நினைச்ச அடுத்த செகண்ட் நடந்த பயங்கரம்'... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
- '9 மாதமாக தாய் வீட்டிலிருந்த மனைவி'... 'கர்ப்பமானதால் அதிர்ந்துபோன கணவர்'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த கலங்கவைக்கும் சம்பவம்'...
- 'கேலி, கிண்டலால் விபத்து எனக் கூறிய குடும்பத்தினர்'... 'அவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கும் போலீசார்'... 'இளம்பெண் மரணத்தில் புது திருப்பம்!'...
- 'லெபனான் கோர விபத்து'... 'என்னோட மக்களுக்கு எதாவது செய்யணும்'... 'மியா காலிஃபா எடுத்த அதிரடி முடிவு'... பாராட்டிய நெட்டிசன்கள்!
- 'ஏன்?.. 'இத' சமைச்சு வச்சா சாப்பிட மாட்டியா'!?.. பாத்ரூமுக்கு சென்ற மனைவி... அடுத்து செய்த பகீர் 'சம்பவம்'!
- 'மாமியார் கூட நடந்த சண்டையில...' 'தாம்பத்ய உறவில் மனைவி எடுத்த சபதம்...' - சுக்குநூறாக நொறுங்கி போன கணவனின் விபரீத முடிவு...!