மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்.. 2 மாதம் கழித்து தெரிய வந்த உண்மை.. "ஒட்டுமொத்த குடும்பமும் ஆடி போச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் Stoke-on-Trent என்னும் பகுதியை சேர்ந்தவர் Garry Jones. 55 வயதாகும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

Also Read | "இது மட்டும் நடந்திருந்தா இந்தியா கூட ஜெயிச்சுருக்கும்".. வாய்ப்பை கோட்டை விட்ட வீரர்கள்.. களத்திலேயே கோபப்பட்டாரா ரோஹித்??

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தொடர்ந்து, அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கையில், கேரி காணாமல் போன அதே நாளில், தனது மனைவி கிறிஸ்டினாவுக்கு கேரி அனுப்பிய மெசேஜ் தொடர்பான செய்தி பலரையும் கலங்கடித்துள்ளது.

அவர் அனுப்பிய மெசேஜில், அனைவரிடமும் நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்பதை கூற வேண்டும் என்றும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கேரி குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது போக தனது மனைவியிடம், அனைத்திற்கும் என்னை மன்னித்து கொள் என்றும் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்றும் கேரி குறிப்பிட்டு மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது போக தனது உடமைகள் எங்கே உள்ளது என்பது குறித்த விவரத்தையும் கேரி குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், காணாமல் போன கேரியை போலீசார் தேடி வந்துள்ளனர். தொடர்ந்து, கேரியின் கார் பற்றிய விவரத்தினை நம்பர் ப்ளேட் மூலம் கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேர் மூலம் போலீசார் அறிந்து கொண்டு, அதன் இருப்பிடத்தையும் கண்டுபிடித்துள்ளனர். Colwyn Bay என்னும் பகுதியில் கேரி கார் நின்ற நிலையில், அதற்குள் ஒரு குறிப்பையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதில், எனது செயலால் மன வேதனையை ஏற்படுத்தியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கேரி குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கேரி எங்கே என்பது பற்றி போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அப்படி இருக்கையில், கேரி காணாமல் போய் இரண்டு மாதங்கள் கழித்து Rhyl என்னும் கடற்கரையில் இருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் ஒரு உடல் கிடப்பதாக கடற்படையினருக்கு அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து, அந்த உடலைக் கைப்பற்றி டிஎன்ஏ பரிசோதனை மூலம் கேரி தான் என்பதை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், இறப்பதற்கு முன்பாக தனது மனநலம் பற்றி மருத்துவரிடம் கேரி கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், நீரில் மூழ்கி விபரீத முடிவை கேரி எடுத்துக் கொண்டதாகவும் விசாரணையில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

தான் இறப்பதற்கு முன்பாக, மனைவிக்கு மெசேஜ் அனுப்பியதுடன், மருத்துவரையும் தனது மனநலம் தொடர்பாக சந்தித்துள்ள தகவல், தற்போது பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "மணமகன் தேவை" என நாளிதழில் வந்த விளம்பரம்.. கடைசி லைன்'ல ஐடி ஊழியர் பத்தி இருந்த விஷயம்.. "ஊரே இன்னைக்கி இத பத்தி தான் பேசுது"

HEARTBREAKING MESSAGE, WIFE, MAN MISSED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்