யாரு சாமி இவரு?.. மெட்ரோ ரயிலுக்கு சமமா ஓடிய நபர்.. நெட்டிசன்களை மிரள வச்ச வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன் மெட்ரோ ரயிலில் இருந்து கீழிறங்கிய நபர் ஒருவர், வேகமாக ஓடி அடுத்த ஸ்டேஷனில் அதே ரயிலை பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பீல்டிங் நின்னது ஒரு குத்தமா.. வீரரை பதம் பார்த்த ஸ்பைடர் கேமரா.. கிரவுண்ட்ல நடந்த சம்பவம்.. வீடியோ..!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக மக்களை ஆச்சர்யப்படுத்தும் வகையிலான விஷயங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற தவறுவதில்லை. அந்த வகையில் லண்டன் மெட்ரோவுக்கு இணையான வேகத்தில் ஒருவர் ஓடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் லண்டன் மெட்ரோவில் இருந்து ஒருவர் கீழிறங்கி வேகமாக ஓடுகிறார். நெரிசலான மெட்ரோ நிலையத்தில் விலகி ஓடும் அந்நபர் நிலையத்தில் இருந்து வெளிவந்து சாலைகளில் ஓடுகிறார். மெட்ரோ ரயிலில் ஒரு கேமராவும், ஓடும் அந்நபரின் உடலில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, அந்நபர் வேகமாக ஓடிச் சென்று அருகில் இருக்கும் அடுத்த ரயில் நிலையத்தில் அதே மெட்ரோ ரயிலில் இருக்கிறார். இது மெட்ரோ ரயிலில் இருந்த கேமராவில் பதிவாகிறது. ஓடிவந்த அயர்ச்சி காரணமாக அந்நபர் ரயிலுக்கு உள்ளே வந்ததும் கீழே படுத்து ஓய்வெடுக்கிறார். அப்போது, ரயிலில் இருந்தவர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.

இந்த வீடியோவை ValaAfshar என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுவரையில் இந்த வீடியோ 48 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவில்,"இவரை ஒலிம்பிக்கிற்கு அனுப்புங்கள்" எனவும் "செக்யூரிட்டி பரிசோதனைகள் ஏதும் மெட்ரோ நிலையங்களில் இருக்காதா?" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சில இந்தியர்கள் "இதனை இந்திய மெட்ரோ ரயில் நிலையங்களில் முயற்சி செய்யவும்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | மனித மூளையை உண்ணும் அமீபா.. சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு கொஞ்ச நாள்ல நேர்ந்த துயரம்.. அறிகுறிகள் என்ன?

MAN, LONDON METRO, RUNS, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்