"அட, இதைக்கூட டாட்டூ போட முடியுமா?.. அன்பு மனைவிக்கு கணவனின் சர்ப்ரைஸ்.. "இப்படியும் இருக்க முடியும்ன்னு ஏங்க வெச்சுட்டாப்ல"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த பிப்ரவரி 14 - ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலுமுள்ள காதலர்கள், இதனை வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தனர்.

                Images are subject to © copyright to their respective owners

தங்கள் மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்களிடம் காதலை வெளிப்படுத்துவது ஒரு பக்கமும், ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் மிகவும் சர்ப்ரைஸாக பரிசுகளை கொடுத்து தங்களின் பார்ட்னர்களை மனமுருக வைத்தது ஒரு பக்கமும் இருந்தது.

"அட, இதைக்கூட டாட்டூ போட முடியுமா?.. அன்பு மனைவிக்கு கணவனின் சர்ப்ரைஸ்.. "இப்படியும் இருக்க முடியும்ன்னு ஏங்க வெச்சுட்டாப்ல"
Advertising
>
Advertising

இதே போல , திருமணம் செய்து கொண்டவர்களும் தங்களது பார்ட்னர்களுக்காக பல்வேறு பரிசுகளை காதலர் தினத்தை முன்னிட்டு அளிக்கவும் செய்திருந்தனர்.

அந்த வகையில், வாலிபர் ஒருவர் தனது மனைவிக்காக டாட்டூ ஒன்றை குத்திக் கொண்ட சூழலில் அது என்ன என்பது தான் பலரையும் தற்போது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது தொடர்பான சம்பவம், தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அந்த நாட்டில் உள்ள நந்தவாட் என்ற வாலிபருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவிக்கு சிறப்பான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கவும் அவர் நினைத்துள்ளார். அதன்படி, அங்குள்ள டாட்டூ கடைக்கு சென்ற வாலிபர், தனது திருமணச் சான்றிதழை கையில் டாட்டூ குத்த  வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

அதுவும் திருமண சான்றிதழை அப்படியே பச்சைக் குத்த வேண்டும் என்பதால், சுமார் 8 மணி நேரம் வரை இதற்கு எடுத்துக் கொண்டுள்ளது. திருமணச் சான்றிதழில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் மிக கவனமாக அப்படியே டாட்டூ கலைஞர்கள் பச்சை குத்தியுள்ளனர். திருமண சான்றிதழில் இருப்பது போன்று அதே நிறங்களிலும் வாலிபர் கையில் டாட்டூ குத்தப்பட்டிருந்த சூழலில், பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு சுமார் 11:58 மணிக்கு தனது மனைவியிடம் இந்த டாட்டூவை காட்டி காதலர் தின சர்ப்ரைஸை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners

ஆரம்பத்தில் கணவர் செயலால் அவரது மனைவி பயமும், அதே வேளையில் ஆவேசமும் அடைந்ததாக தெரிகிறது. பின்னர் அதனை நந்தவாட் புரிய வைக்க, மனைவியும் ஏற்றுக் கொண்டுள்ளார். விருப்பம் உள்ளவர்கள் பெயரையும், அவர்கள் முகத்தையும் பலர் பச்சைக் குத்தி கொள்ளும் சூழலில், திருமணத்திற்கு ஆதாரமான திருமண சான்றிதழை கையிலேயே வாலிபர் ஒருவர் டாட்டூ குத்தியுள்ள விஷயம், இணையத்தில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

LOVE, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்