ரெஸ்டாரண்ட்டில் இருந்த இளைஞர்.. திடீர்ன்னு கைது செஞ்ச போலீஸ்.. அதிர்ந்து போன பெண்.. "கடைசி'ல தான் விஷயமே தெரிஞ்சுருக்கு"
முகப்பு > செய்திகள் > உலகம்திடீரென இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், அவருடன் இருந்த பெண்ணுக்கு கடும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
பொதுவாக, தங்களுக்கு விருப்பமானவர்களிடம் தங்களின் காதலை வெளிப்படுத்த பல பல புது வழிகளை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கருதுவார்கள்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக மேற்கொண்ட சர்ப்ரைஸ் திட்டம் ஒன்று தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றின் படி, இரண்டு போலீசார் திடீரென உணவகம் ஒன்றில் நுழைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் இளைஞர் ஒருவரை திடீரென கைது செய்து வெளியேவும் அழைத்து வருகின்றனர் அந்த போலீசார். அங்கே இளைஞருடன் வந்த பெண்ணும் வெளியே வர, அவரிடம் தனது காதலை கைதுக்கு மத்தியல் அந்த இளைஞர் வெளிப்படுத்துகிறார்.
இதனைக் கண்டதும் அந்த பெண் ஒரு நிமிடம் குழம்பி போகவே, அவரிடம் மோதிரத்தையும் நீட்டி உள்ளார் அந்த இளைஞர். அந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் சிரிக்க ஆரம்பித்ததும், இவை அனைத்தும் ஏற்கனவே போட்ட திட்டம் என்பதும் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. காதலை வெளிப்படுத்திய இளைஞரிடம் சம்மதம் தெரிவித்த பெண், அவரை கட்டி அணைக்கவும் செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை வாஷிங்டனில் உள்ள Whitman போலீஸ் டிபார்ட்மெண்ட், தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் இந்த இளைஞருக்காக போலீசார் உதவி செய்தது தொடர்பான காரணத்தையும் அந்த பதிவில் அவர்கள் விளக்கி உள்ளனர். தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்த, Wayne என்ற இளைஞர் போலீசார் உதவியை நாடி உள்ளார். காதலி முன்பு கைது செய்யப்படும் போது, காதலை வெளிப்படுத்தவும் தான் திட்டம் போட்டுள்ளதாக Wayne போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு மறுத்த போலீசார், பின்னர் இறுதியில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி உணவகத்தில் தனது காதலியுடன் இளைஞர் உணவருந்தி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் இளைஞர் Wayne-ஐ கைது செய்வது போல நடித்து தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தவும் அவர்கள் உதவியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரியிடம் இருந்து ஒப்புதல் பெற்று இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
Also Read | அதிவேக பைக் பயணம்.. சரணடைந்த TTF வாசன்.. அடுத்தடுத்து நடந்தது என்ன??
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவன் மீண்டு வரணும்..அதுபோதும்".. மகனுடைய சிகிச்சைக்காக தந்தை எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!
- மாடலிங் பெண்கள் தான் டார்கெட்டே.. இளைஞரின் தினுசான உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!
- பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர்.. மிரண்டுபோன வீட்டுக்காரர்.. வெளியே வந்ததும் மனுஷன் ஒன்னு சொன்னாரு பாருங்க..!
- பிரசவ வலியில் துடித்த ஆதரவற்ற பெண்.. ஓடிச்சென்று பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்..!
- மனசு இருந்தா போதும்.. பொழச்சுக்கலாம்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!
- "25 வருசமா ஆள புடிக்க முடியல".. கடைசி'ல போலீஸ் போட்ட ஸ்கெட்ச்.. "இப்டி வசமா சிக்குவோம்னு மனுஷன் நெனச்சு இருக்க மாட்டாரு"
- "அவரு Vibe ஆகுறது மட்டும் இல்லாம நம்மளையும் சேர்த்து Vibe ஆக்குறாரே".. பட்டையை கிளப்பும் காவலர்.. "சுத்தி நிக்குறவங்களே சொக்கி போய்ட்டாங்க"
- பூட்டிய காரை திறந்த பார்த்து உறைந்துபோன ஓனர்.! .. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்.!
- "புலிக்குட்டி விற்பனைக்கு".. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் பரபரப்பு கைது.!
- ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்