7 வருஷ சர்வீஸ்ல செஞ்ச முதல் தப்பு.. ஊழியரை திடீர்னு வேலையை விட்டு தூக்கிய ஓனர்.. காரணத்தை கேட்டு ஷாக்கான சக பணியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பணியாளர் ஒருவர் 20 நிமிடங்கள் தாமதமாக வேலைக்கு வந்ததாக கூறி நிறுவனம் அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது. இதனையடுத்து அவரது சக பணியாளர்கள் வித்தியாசமான முறையில் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் வெவ்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கிவருகின்றன. பணியாளர்களை வேலைக்கு எடுப்பது, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை அந்த நாடுகள் விதித்துள்ள சட்டவரையறைகள் மூலமாக நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. அதேவேளையில், சில நிறுவனங்கள் சில நேரங்களில் விதிமுறைகளை மீறி செயல்படும்போது அது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்துகிறது. அப்படித்தான் நடந்திருக்கிறது ஒருவருக்கும்.
பிரபல சமூக வலைத்தளமான ரெட்டிட்-ல் தற்போது ஒருவருடைய பதிவு வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களின் குரல் அந்த பதிவில் எதிரொலிக்கிறது.
தாமதம்
அந்த நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சமீபத்தில் ஒருநாள் 20 நிமிடங்கள் தாமதமாக பணிக்கு வந்திருக்கிறார். இது அந்நிறுவனத்தின் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே தாமதமாக வந்ததை காரணம் காட்டி அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது அந்த நிறுவனம். அந்த பணியாளர் அதே நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் இவ்வாறு பணிக்கு தாமதமாக வேலைக்கு வருவது இதுவே முதல் முறை என்கிறார்கள் சக பணியாளர்கள்.
வைரல் பதிவு
இதனையடுத்து இந்த விஷயம் அந்த நிறுவனத்தில் பணிபுரிம் சக ஊழியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அந்த பணியாளர்களில் ஒருவர் எழுதிய பதிவில்," இந்த நிறுவனத்தில் இது புதிதான விஷயம். அவர் தனது 7 வருட அனுபவத்தில் முதன்முறையாக 20 நிமிடம் தாமதமாக வேலைக்கு வந்ததாக கூறி அவரை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டம்
இதனை எதிர்க்கும் விதமாக, அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்கும்வரையில் அனைத்து ஊழியர்களும் தாமதமாக வேலைக்கு செல்ல இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊழியரும் ஒவ்வொரு காரணத்தின் அடிப்படையில் தாமதமாக வேலைக்கு செல்வதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் நிறுவனத்தில் சேரும்வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இப்போராட்டத்துக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், நெட்டிசன்கள் தங்களது வாழ்வில் ஏற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கரைக்கு வந்த சிக்னல்.. நடுக்கடலில் தலைகீழாக மிதந்த படகு.. "பக்கத்துல போய் பாத்ததுக்கு அப்புறம்.." 'த்ரில்' சம்பவம்!!
- மனைவிக்கு தெரியாம இரண்டாவது கல்யாணம் செஞ்ச நபர்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!
- சிலந்திக்கு முடிவுகட்ட வாலிபர் எடுத்த முடிவு.. அடுத்த நாள் மொத்த நாடும் ஷாக் ஆகிடுச்சு..!
- "உங்க ஆசீர்வாதம் வேணும்.." தமிழர் போட்ட ட்வீட்.. மனதை வென்ற ஆனந்த் மஹிந்திராவின் 'Reply'!!.. வைரலாகும் பதிவு!
- "அந்த 7 மணி நேரத்த வாழ்க்கை'ல மறக்க மாட்டேன்.. " பயங்கரமான இரவு.. பீதியில் உறைந்த இளைஞர்!!..
- "14 நாளா குளிக்கல.." Toilet பைப் தண்ணி தான் சில நாள் சாப்பாடு.. விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணி.. அதிர்ச்சி சம்பவம்..
- "வயசு 27 ஆகுதுங்க.. ஆனா பாக்க சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு சொல்லி.." வேதனையில் புலம்பும் இளைஞர்..
- "உங்க போனை நான் எடுக்கல"..கதறிய இளைஞர்.. ஆத்திரத்தில் நண்பர்கள் செஞ்ச காரியம்.. சோகத்தில் முடிந்த பார்ட்டி..!
- "விஷம் இருக்காதுன்னு நெனச்சன்.. ஆனா தலை சுத்திடுச்சு".. கடிச்ச பாம்புடன் ஹாஸ்ப்பிட்டலுக்கு போன நபர்.. லாஸ்ட்ல ஒன்னு சொன்னாரு பாருங்க..!
- அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள்ள நுழைஞ்ச ட்ரக்.. டாப் லெவல் அதிகாரி எல்லாரும் கூடிட்டாங்க.. டிரைவர் சொன்னதை கேட்டு கடுப்பான காவல்துறை.!