“ஒரே ஒரு முத்தம்தான்!”.. இளம் பெண்ணுடன் டேட்டிங் சென்ற நபருக்கு வாழ்நாள் முழுவதும் தொற்றிக் கொண்ட தீராத நோய்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் டேட்டிங் சென்றபோது, இளம் பெண்ணை முத்தமிட்டதால், வாழ்நாள் முழுவதும் நீங்காத நோயை ஒருவர் பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த மார்டின் ஆஷ்லே கான்வே என்கிற 45 வயது நபர் ஒருவர் ஜோவன்னா லோவன்ஸ் என்கிற இளம் பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் டேட்டிங் சென்றபோது நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டதால், ஜோவன்னா லோவன்ஸுக்கு இருந்த ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் (Herpes Simplex) என்கிற வைரஸ் தொற்று, மார்டினுக்கு பரவியது.

சில நாட்களுக்கு பின்னர், மார்டினுக்கு திடீரென வாயில் புண்கள் தோன்றியுள்ளன. அதன் பின் ஃப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டு வாய்ப்புண் அதிகமாகி, எதையுமே விழுங்க முடியாமல் தவித்துள்ளார் மார்டின். அதன் பின்னர் மருத்துவமனை சென்றபோது மார்டினுக்கு ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் என்கிற நோய்த்தொற்று இருந்தது தெரியவந்தது. அப்போதுதான் அதுவரை, தனக்கு அப்படி ஒரு தொற்று இருந்ததை ஜோவன்னா மார்டினிடம் மறைத்து வந்ததையும் மார்டின் அறிந்துள்ளார்.

இதனால் ஜோவன்னா மீது மார்டின் 1 லட்சத்து  30 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்