"மகன் பிறந்துட்டான்னு குஷில இப்படி ஒரு பெயர் வச்சுட்டோம்.. அதுவே இப்போ சிக்கலா ஆகிடுச்சு".. தவிக்கும் பெற்றோர்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது மகன் பிறந்தபோது சந்தோஷத்தில் 27 வார்த்தைகளில் பெயர் வைத்திருக்கிறார் தந்தை ஒருவர். இப்போது அவற்றில் பாதி தனக்கு மறந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | வீட்டு வாசல்ல கிடந்த வயர்.. எடுக்கப்போன அப்பா... மகன் கண்முன்னாடியே நடந்த துயரம்..!

பெயர்

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர்  வைப்பது பல பெற்றோருக்கும் சவாலான காரியமாக இருந்துவிடுகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அங்கிருக்கும் நம்பிக்கைகளின் அடிப்படையில் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால், புதுமையாக இருக்க வேண்டும் என தங்களது குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஹிப்பி கலாச்சாரத்தை பின்பற்றும் குடும்பத்தினர் வைத்த பெயர் தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

1970 ஆம் ஆண்டு தனக்கு மகன் பிறந்த உடனேயே தங்களது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பரிந்துரைத்த பெயர்களை சூட்டியிருக்கிறார் இந்த தந்தை. முதல் பெயராக Rain எனப் பெயர் சூட்டியுள்ளார். அதற்கடுத்து middle name எனப்படும் முதற்பெயரை தொடர்ந்து வரும் இரண்டாவது பெயரை தனது குடும்ப நண்பர்கள் மூலமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி Rain க்கு தொடர்புடைய சொற்களான Storm, Thunder, Cloud, Fire, Flight, Ambrose, Elijah, Food, Bird, Hawk, Wind, Ocean என 27 பெயர்களை வைத்திருக்கிறார் அந்த வினோத தந்தை.

தனித்துவமான பெயர்

இதுகுறித்து பேசிய அவர்,"நாங்கள் எங்களது மகனுக்கு உண்மையிலேயே தனித்துவமான முறையில் பெயரிட வேண்டும் என்று முடிவு செய்தோம். இது காதல் புரட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனை தொடர்ந்து எங்களது நண்பர்கள் கூறிய 27 வார்த்தைகளை middle name ஆக சூட்டினோம். ஆனால் அவற்றுள் பாதியை நாங்கள் மறந்துவிட்டோம்" என்கிறார் சோகமாக.

இருப்பினும், அவரது மகன் தனக்கான பெயரை தானேதெர்ந்தெடுக்க விரும்பியதால் அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறார் தந்தை. இதன்மூலம் தனது 4 ஆம் வயதில் பெட்டி க்ராக்கர் (BETTY CROCKER) என தனக்கு தானே பெயர்சூட்டியிருக்கிருக்கிறார் அவரது மகன். இவை நடந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும் தனது மகனுக்கு வைக்கப்பட்ட 27 பெயர்களை மீண்டும் நினைவுபடுத்த இன்னும் முயற்சி செய்துவருகிறாராம் இந்த தந்தை.

Also Read | "என்னது, எல்லா குழந்தைக்கும் இப்டி தான் பேரு வெச்சு இருக்காங்களா??.." வியப்பை ஏற்படுத்திய தம்பதி..

MAN, BIRTH, SON, NAMES, BORN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்