5 வருடம் முன்பு தொலைந்த மூக்கு வளையம்.. "எங்க தேடியும் கிடைக்கல".. திடீர்னு தெரிய வந்த அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது Nose Ring தொலைந்து போனதாக இளைஞர் கருதி வந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து அது கிடைத்துள்ள இடம் தான் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

Joey Lykins என்ற இளைஞர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மூக்கு வளையம் ஒன்றை தொலைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆரம்பத்தில் இதனை அவர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால், இந்த மூக்கு வளையம் எங்கேயும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், சுமார் ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், இளைஞர் ஜோய்க்கு திடீரென அதிக இருமலும், முதுகு வலியும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரது குடும்பத்தினர் நிமோனியா என பயந்து போய், நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன் பின்னர் ஜோயை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எக்ஸ் ரே எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது தான் அங்கிருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஜோயின் மூக்கு வளையம், அவரது நுரையீரலின் மேல் பகுதியில் இருந்துள்ளது. மேலும், ஜோய் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் வாய் வழியாக நுரையீரல் பக்திக்கு சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இது பற்றி பேசும் இளைஞர் ஜோய், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கத்தில் இருந்து கண் விழித்து பார்த்த போது, மூக்கில் இருந்த வளையம் காணாமல் போனதை உணர்ந்தேன். படுக்கையறை முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, நான் விழுங்கி இருக்கலாம் என்றும் நினைத்தேன். இதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து, கடந்த வாரம் நான் எழுந்த போது எனக்கு மிகவும் கடினமான இருமல் இருந்தது.

ஏதோ எனது சுவாச பாதையை தடுப்பதை போல உணர்ந்தேன். இதன் பின்னர் தான் மருத்துவமனைக்கு சென்றோம்" என கூறி உள்ளார். தொடர்ந்து, இனிமேல் அந்த மூக்கில் போடும் வளையத்தை அணிய போவதில்லை என்றும், ஒரு நினைவு பொருளாக அதனை வைத்திருப்பேன் என்றும் ஜோய் முடிவு எடுத்துள்ளார். இத்தனை ஆண்டுகள் தனக்கு அந்த வளையம் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், தற்போது கூட அதனால் எதுவும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று ஜோய் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

NOSE RING, LUNGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்