'குவாரண்டைனில் இருந்து எஸ்கேப்'... 'ஜாலியா காதலி வீட்டிற்கு வந்து கப்போர்டில் ஒழிந்த இளைஞர்'... 'இதுக்கா ஏணி புடிச்சு எஸ்கேப் ஆகி வந்தேன்'... அல்டிமேட் ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா காரணமாகத் தனிமைப்படுத்துதலில் இருந்த இளைஞர் ஏணியை வைத்துத் தப்பித்துக் காதலி வீட்டிற்கு வந்தவருக்குப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா குறித்த அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் கொரோனா தொற்று இருப்போர் தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க வேண்டும். கொரோனா சந்தேகம் இருந்தாலோ அல்லது வெளி இடங்களுக்குப் பயணம் செய்து கொண்டு வந்தாலோ 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டும் வெளியில் நடமாடலாம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் யூசுஃப் என்ற இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஒரு ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இந்தச்சூழ்நிலையில் அங்கு இருக்க மனமில்லாமல் யாரும் இல்லாத நேரத்தில் எங்கிருந்த ஒரு ஏணியைப் பயன்படுத்தித் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போனது. இளைஞரின் இந்த முயற்சியை அறிந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த ஏணியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் சிலர் நாட்கள் ஒழுங்காக இருந்த அவர், மீண்டும் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பித்த யூசுஃப் ஆசையாகத் தனது காதலியைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

காதலியின் வீட்டிற்குச் சென்று விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என அங்குச் சென்றுள்ளார். அங்குக் காதலியைச் சந்தித்த மகிழ்ச்சியிலிருந்த அவருக்குக் கொஞ்ச நேரம் கூட அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. காரணம் யூசுஃப் தப்பிய விவகாரத்தை ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தினார்கள்.  அதனைத்தொடர்ந்து இளைஞர் எங்குச் சென்றார் என்பதை மோப்பம் பிடித்துச் சென்ற போலீசார், யூசுஃப்பின் காதலி வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார்கள்.

போலீசார் வந்ததைச் சற்றும் எதிர்பாராத அவர், அங்கிருந்த கப்போர்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டார். வீட்டிற்குள் வந்த போலீசாரை யூசுஃப்பின் காதலி சமாளிக்க முயன்ற நிலையிலும், ஒரு வழியாகக் கொத்தாக யூசுஃப் மாட்டிக் கொண்டார். கப்போர்டிற்குள் இருந்த யூசுஃப்பை அள்ளிக் கொண்டு போன போலீசார், நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தினார்கள். 

அங்கு அவருக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் விதியை மீறிய குற்றத்திற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனிமைப்படுத்தி இருந்தால் கூட 14 நாளில் வெளியில் வந்திருப்பேன். ஆனால் ஆசைப் பட்டுக் காதலி வீட்டிற்குச் சென்று இப்படி 6 மாத காலம் சிறைக்குச் செல்ல வேண்டியது ஆயிற்றே என நோந்து கொண்டார் யூசுஃப்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்