VIDEO : ஒரே நேரத்துல,,.. 'ரெஸ்டாரண்டோட மொத்த மெனுவையும் 'காலி' பண்ணிட்டாரு,.. 'Foodie' இளைஞரின் வைரல் 'வீடியோ'... காரணம் இது 'தான்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் சில நாடுகளில் அதிகம் உண்ணுவது உண்பது யார் என்பது தொடர்பான போட்டிகள் நடைபெறும்.

குறைவான நேரத்தில் அதிகம் உண்பது, அதிக கலோரி உணவுகளை உட்கொள்வது, ஹோட்டல் மெனு ஒன்றில் இருக்கும் அனைத்து உணவுகளையும் உண்பது என உணவு போட்டிகள் பல வகைகளில் நடைபெறும். இங்கிலாந்தை சேர்ந்த 22 வயது இளைஞரான கைல் கிப்ஸன் என்பவர் மேற்கூறிய உணவு போட்டிகளில் பெயர் போனவர்.

இந்நிலையில், தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக நிதி திரட்ட வேண்டி கைல் கிப்ஸன், பாஸ்ட் புட் கடை ஒன்றின் மெனுவிலுள்ள உணவுகள் அனைத்தையும் 61 நிமிடங்களில் அருந்தி முடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் தனது யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மொத்தமாக 8 பர்கர்கள், 4 ஹாட் டாக்குகள், 3 சாண்ட்விச்கள் உட்பட 13,000 கலோரி உணவுகளை அவர் உண்டு முடித்துள்ளார்.

இதன்மூலம், 400 பவுண்ட் நிதியை நியூ காஷ்டில் பகுதியில் அமைந்துள்ள உணவு வங்கிக்கு வேண்டி அவர் திரட்டியுள்ளர். மேலும் 100 பவுண்ட்க்கான உணவு பொருட்களை அந்த தொண்டு நிறுவனத்திற்கும் அளித்துள்ளார். இதுகுறித்து இளைஞர் கைல் கிப்ஸன் கூறுகையில், 'இந்த மாதிரியான விஷயங்களை எனக்கு செய்வது ரொம்ப பிடிக்கும். அதே வேளையில், பல குடும்பங்கள் உணவு கூட கிடைக்காமல் உணவு வங்கிகளை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் தான் எனக்கு கிடைத்த பணத்தை நன்கொடையை உணவு வங்கிக்கு அளித்தேன்' என்றார்.

மேலும், 'இந்த மாதிரியான ஜங்க் உணவு வகைகளை அதிகம் உண்டாலும், மற்ற நாட்களில் எனது உடல் ஆரோக்கியத்தில் நான் மிகவும் கவனமாக உள்ளேன். ஜிம் செல்வது, ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் காய்கறிகளை மட்டுமே தான் உண்பேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்