‘சாப்பிட்டது 200 ரூபாய்க்கு’.. ஆனா ‘பார்க்கிங்’ சார்ஜ் இவ்ளோவா.. ‘நல்லா இருக்குங்க உங்க டீலிங்’.. மிரண்டு போன தாத்தா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பேரனுடன் சாப்பிட சென்ற தாத்தா, கார் பார்க்கிங் பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் 75 வயதான ஜான் பாபேஜ். இவர் தனது பேரன் டெய்லருடன் அருகில் உள்ள மெக்டொனால்டு ஹோட்டலில் 2.70 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.284) சாப்பிட்டுள்ளனர். பின்னர் ஹோட்டலுக்கு அருகே சில சிறுவர்களுடன் டெய்லர் விளையாடியுள்ளார். இதனால் பேரன் வரும் வரை ஜான் பாபேஜ் காரிலேயே தூங்கியுள்ளார். இதன்பின்னர் இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த நாள் மெக்டொனால்டு ஹோட்டலில் இருந்து சில ஊழியர்கள் ஜான் பாபேஜின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் கார் பார்க்கிங் கட்டணத்துக்கான ஒரு பில்லை ஜான் பாபேஜிடம் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்த ஜான் பாபேஜ் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதில் 2,800 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.2,85,419) பார்க்கிங் கட்டணம் அபராத்துடன் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மெக்டொனால்டு ஊழியர்களிடம் இதுதொடர்பாக ஜான் பாபேஜ் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பார்க்கிங் நேரமான 2 மணி நேரத்தை கடந்து, 17 நிமிடங்கள் அதிகமாக அவர் காரை நிறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெறும் 17 நிமிடத்துக்கு 2 லட்சம் அபராதமா? என மிரண்டு போன ஜான் பாபேஜ் அபராதத் தொகையை கட்ட மறுத்துள்ளார்.

இதனால் ஜான் பாபேஜ் மீது மெக்டொனால்டு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மார்ச் மாதம் விசாரிக்கப்பட உள்ளது. 17 நிமிடம் அதிகமாக பார்க்கிங் செய்ததற்காக 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்