24 அடி துளையில் சிக்கிக் கொண்ட நபர்.. "4 நாள் கழிச்சு மீட்க போனவங்க பாத்த விஷயம்".. ஒரு நிமிஷம் மிரண்டே போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காளான் பறிக்கும் நபர் ஒருவர், சுமார் 24 அடி ஆழமுள்ள குழி ஒன்றில் விழுந்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

கிழக்கு ரஷ்யா பகுதியைச் சேர்ந்த Sergei Khmelevsky என்ற நபர், காளான் பறித்து வரும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான், சுமார் 24 அடி ஆழமுள்ள துளை ஒன்றில் தவறி விழுந்துள்ளார். இதனிடையே, Sergei காணாமல் போனது தொடர்பாக தகவல் கிடைத்ததும் கடந்த நான்கு நாட்களாக அவரை தன்னார்வலர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தேடி வந்துள்ளனர்.

ஆனால், அவர் எங்கே தொலைந்து போனார் என்ற தகவல் தெரியாமல் அவர்கள் தேடி வந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், Sergei-க்கு காது கேட்காது என்பதால், அருகே யாராவது பேசினால் கூட கேட்க முடியாது என்றும் கூறப்படுகிறது. தான் சிக்கிக் கொண்டதை அறிவிப்பதற்காக பல முறை அவர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்துள்ளார்.

இறுதியில், தனது மொபைல் போன் டார்ச் லைட் மூலம் வெளியே அடிக்கவே, அதன் மூலம் மீட்க வந்தவர்கள், Sergei இருந்த இடத்தினை அடையாளம் கண்டுள்ளனர். முன்னதாக, அவர் குழிக்குள் சிக்கிய காடு என்பது, கருப்பு கரடிகளும் மற்றும் அமுர் புலிகள் இருந்த இடமாகும். மேலும், அங்கே ஏராளமான குழிகளும் புல் நிறைந்து மூடப்பட்டு கிடக்கிறது.

அப்படி ஒரு குழியில் தான், Sergei சிக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் நான்கு நாட்கள் கழித்து அவர் இருக்கும் இடத்தை அறிந்த மீட்புக் குழு, பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் அவரை பத்திரமாக மீட்டுள்ளது. மேலும், 24 அடி குழிக்குள் சிக்கிய Sergie, குழிக்குள் தேங்கி இருந்த நீரைக் குடித்து, நான்கு நாட்கள் உயிர் பிழைத்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், அவரை மீட்ட நபர்களில் ஒருவர், நான்கு நாட்கள் கழித்து ஒருவரை மீட்பது என்பது எப்போதும் நடக்காது என்றும் கூறி உள்ளார். மேலும், இந்த குழியில் சிக்கிக் கொண்டதால், அவரது கால் பகுதியில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

37 வயதாகும் Sergei Khmelevsky என்ற நபர், துளை ஒன்றில் தவறி விழுந்து சுமார் நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம், கடும் வியப்பை பலரது மத்தியில் உருவாக்கி உள்ளது.

MAN, RESCUE, 24 FT HOLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்