2000 அடி உயரத்தில் நடந்த பட ‘சூட்டிங்’.. கை தவறி விழுந்த ‘ஐபோன்’.. தேடிப் பார்த்தபோது காத்திருந்த ஆச்சரியம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானத்தில் இருந்து படம் பிடித்த போது தவறி விழுந்த ஐபோனை கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆவணப்பட தயாரிப்பாளரான எர்னெஸ்டோ காலியோட்டோ (Ernesto Galiotto) என்பவர் ரியோடி ஜெனிரோவில் உள்ள கடற்கரையோரத்தில் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது விமானம் மூலம் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தனது ஐபோன் 6s மூலம் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்திருந்தார். அந்த சமயம் காற்று பலமாக அடித்ததால், கை தவறி செல்போனில் கீழே விழுந்துள்ளது. உடனடியாக ஐபோனை தேடி கண்டுபிடித்த அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த ஐபோன் எந்தவித சேதமும் அடையாமல் அப்படியே இருந்துள்ளது. ஐபோன் மேல் போடப்பட்டிருந்த Scratch card மட்டும் சிறிதாக சேதமடைந்துள்ளது. மற்றொரு வியப்பான விஷயம் என்னவென்றால், வீடியோ பதிவு செய்து கொண்டே ஐபோன் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு சில இடங்களை தவிர, மற்ற இடங்களில் மிகவும் அற்புதமாக காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் பேசிய எர்னெஸ்டோ, ‘ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். விமானத்தின் உதவியுடன் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் காட்சிகள் படமாக்கி கொண்டிருக்கும்போது, காற்று பலமாக வீசியது. மிகுந்த சிரமத்துக்கு இடையே, ஐபோன் 6s-ஐ ஒரு கையில் பிடித்தவாறே காட்சிகளை பதிவு செய்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக கையில் இருந்த ஐபோன் கீழே விழுந்துவிட்டது.

உடனே Find My app மூலம் ஐபோனை தேடிக் கண்டுபிடித்தோம். அப்போது எந்த சேதமும் அடையாமல் போன் வேலை செய்துகொண்டிருந்தது. ஐபோன் கீழே விழுந்ததும், அதை நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம் என நான் நம்பினேன். நிலத்தில் விழுந்திருந்தால் நாங்கள் மிக எளிமையாக கண்டுபிடித்திருப்போம். ஆனால் தண்ணீருக்குள் விழுந்ததால் ஐபோனை தேடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது’ என ஏர்னெஸ்டோ தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்