"நீ ஒடச்சியே அதோட மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?".. காதலியோட சண்டை போட்டுட்டு மியூசியத்துக்குள்ள போன காதலன்.. பதறிப்போன போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் காதலியுடன் ஏற்பட்ட சண்டையினால் கோபமடைந்த இளைஞர், அருகில் இருந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை உடைத்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரையன் ஹெர்னாண்டஸ். 21 வயதான இவர் கடந்த புதன்கிழமை இரவு 9.40 மணிக்கு டெல்லாஸ் அருங்காட்சியகத்திற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். உலோக சேருடன் உள்ளே வந்த பிரையன் அங்கிருந்த கண்ணாடி தடுப்புகளை உடைத்திருக்கிறார். அதன்பிறகு, அதனுள் பாதுகாக்கப்பட்டிருந்த பண்டைய கிரேக்க கலைப் பொருட்களை தாக்கியுள்ளார் பிரையன். அவற்றின் மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவித்திருக்கிறது அருங்காட்சி நிர்வாகம்.

கண்ணை மறைத்த கோபம்

கோபத்தில் கண்ணில் கண்டதையெல்லாம் அடித்து நொறுக்கிய பிரையன், 2500 ஆண்டு பழமையான கிரேக்க மட்பாண்டங்களை உடைத்ததாக கூறிய போலீசார், அதுமட்டும் அல்லாமல்   10,000 டாலர் மதிப்புள்ள பூர்வீக அமெரிக்க கலைப் பொருளையும், சுமார் 540 BCE காலத்தைச் சேர்ந்த 100,000 டாலர் மதிப்புள்ள கிரேக்கக் கோப்பையையும் அழித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அருங்காட்சியகத்தில் இருந்த போன், பெஞ்ச், கம்பியூட்டர் ஆகியவற்றையும் உடைத்துத் தள்ளியிருக்கிறார் பிரையன். இதுபற்றி பேசிய இந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் அகஸ்டின் ஆர்டேகா," சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு 5,153,000 அமெரிக்க டாலர்களாகும்" என்றார்.

சரணடைந்த காதலன்

அருங்காட்சியகத்தில் புகுந்து அனைத்தையும் உடைத்துவிட்டு, பிரையன் 911 க்கு போன் செய்து போலீசை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் பிரையினை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் "பிரையன் தனது காதலியுடன் சண்டை ஏற்பட்டதால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்" என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் பிரையன் ஆஜர்படுத்தப்படுவார் எனவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LOVE, GIRLFRIEND, MUSEUM, AMERICA, காதலன், காதலி, சண்டை, அருங்காட்சியகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்