இந்த Resume எப்படி செலக்ட் ஆகாம போகும்னு பாக்குறேன்.. கூகுளில் வேலைக்காக இளைஞர் உருவாக்கிய அடடே Resume.. வைரலாகும் Pic..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டி ஒருவர் உருவாக்கிய வினோத Resume -ன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "18 வயசு ஆகலையா?.. அப்போ செல்போனை தொட கூடாது".. கிராமத்தின் விநோத கட்டுப்பாடு.. அபராதம் வேற போடுறாங்களாம்..!

வேலைதேடுவதில் எப்போதுமே Resume உருவாக்குவதுதான் சவாலான பணியாக இருக்கும். குறிப்பாக கூகுள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணிபுரிய விருப்பப்படும் நபர்கள் பார்த்தவுடன் கவரும் வகையில் தங்களது Resume-ஐ தயாரிக்க முனைவார்கள். அந்த வகையில் ஆதித்ய சர்மா என்பவர் கூகுளில் பணியில் சேரும் நோக்கத்தில் வித்தியாசமான Resume-ஐ உருவாக்கியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

HiCounselor நிறுவனத்தில் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஆதித்ய சர்மா. இவர் தனது LinkedIn பக்கத்தில் தனது வித்தியாசமான Resume-ஐ பகிர்ந்திருக்கிறார். கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்காக இதனை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில்,"கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால், தேர்வு கடுமையாக இருக்கும். ஆகவே இந்த Resume-ஐ கூகுள் Dark Mode வகையில் தயாரித்தேன். இது நிறுவனத்தின் அதிகாரிகளுடைய கவனத்தை ஈர்க்குமா? உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுபோன்ற Resume கள் தேவைப்படுபவர்கள் தன்னை தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Google search results போலவே இருக்கும் அந்த Resume-ல் தனது படிப்பு, அனுபவம் மற்றும் வேலை ஆகியவற்றை அதில் இருப்பது போலவே குறிப்பிட்டிருக்கிறார் ஆதித்யா சர்மா. இந்த வினோதமான Resume  நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ஆதித்யா சர்மா இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். இதுவரையில் இந்த பதிவை 11,000 பேர் லைக் செய்திருக்கின்றனர்.

மேலும், "இந்த பதிவை பார்த்துவிட்டு பலரும் தங்களுக்கும் இதுபோன்ற Resume தேவை என வரிசையில் வரப்போகிறார்கள்" என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். இன்னொருவர்,"இது மிகச்சிறந்த ஐடியா" எனவும் இந்தப் பதிவில் கமெண்ட் செய்திருக்கின்றார்.

ஆதித்யா ஷர்மா இதற்கு முன்னர் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இதேபோன்ற தனித்துவமான முறையில் Resume-களை தயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "காசியும் தமிழகமும் ஒன்றுதான்".. தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்.. பின்னணி என்ன?

MAN, RESUME, MAN DESIGNS CREATIVE RESUME, JOB, GOOGLE PIC SURFACE, RESUME IN GOOGLE PIC SURFACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்