“ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த கணவர் ஒருவர் தன் மனைவிக்கு இறுதியாகப் பேசி வைத்துவிட்டுச் சென்ற ஆடியோ பதிவு உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான ஜொனாதன் டான்பரி என்பவர் கடந்த மார்ச் 25ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக தன்னுடைய வாழ்க்கையை வென்டிலேட்டரில் கழித்துள்ள இவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இவர் இறப்பதற்கு முன் கடைசியாக தனது மனைவி கேட்டி கொயல்ஹோ மற்றும் குழந்தைகள் பிராட்டின், பென்னி உள்ளிட்டவர்களுக்காக பேசி பதிவு செய்துவைத்திருந்த ஆடியோ உருக வைத்துள்ளது. அதில், “கேட்டி, ஐ லவ் யூ. நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை எனக்காக நீ அளித்தாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உனக்கு கணவனாகவும், பிராட்டின் மற்றும் பென்னியின் தந்தையாகவும் இருப்பதில் எனக்கு பெருமை. நான் சந்தித்த மிகவும் அன்பான மற்றும் அழகான பெண்ணான நீ உண்மையில் அற்புதமானவள். நீ நம் குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் இருக்கிறாய்” என்று உருக்கமாக பேசியுள்ளார். மேலும், அந்த ஆடியோ பதிவில், “பிராட்டின் உனக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீ அற்புதமான விஷயங்களை செய்து வருகிறாய். பென்னி, அவள் ஒரு இளவரசி. கேட்டி, உன்னையும் குழந்தைகளையும் விரும்பும் ஒரு நபரை சந்தித்தால் நீ பின்வாங்க வேண்டாம். உங்களுக்காக நான் அதையும் விரும்புகிறேன் என நினைவில் வைத்துக்கொள். எதுவாக இருந்தாலும் எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிப் பேசிய கேட்டி, “நான் ஐசியுவில் அமர்ந்து அழுதபடி என் கணவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்று கதறிக் கொண்டு இருந்தேன். அப்போது தான் அவருடைய போனை என்னிடம் தந்தார்கள். அதில்தான் அவர் பேசிய இந்த உருக்கமான ஆடியோ குறிப்புகள் இருந்தன. ஒரு மாதத்துக்கு மேல் அவர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதும் கூட அவருக்கு என் மீதும் குழந்தைகள் மீதும் கவனம் இருந்துள்ளது!” என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன?...
- ‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?
- ‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!
- ‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்?’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது?’
- ‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!
- 'ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா'... 'அமெரிக்காவை சுழற்றிய அடுத்த பயங்கரம்'... 7 பேர் பலியான பரிதாபம்!
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- 2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்!
- 'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்!