‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா?’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்!
முகப்பு > செய்திகள் > உலகம்உண்மையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற வார்த்தைகளுக்கு பொருத்தமான ஒன்று இணையதளம் தான்.
அதிலும் தேடுபொறி தளங்களில் முதன்மையான தளமான கூகுளில் எதை வேண்டுமானாலும் தேடி கண்டுபிடிக்க முடியும். அதேபோல் கூகுள் மேப் பயன்படுத்தி எந்த ஏரியாவையும் எந்த தெருவையும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று ஆகிவிட்டது. ஆனால் பெர்லினை சேர்ந்த சைமன் விக்கெரிக் என்கிற கலைஞர் ஒருவர் நிறைய செல்போன்களை ஒரு தள்ளு வண்டியில் போட்டு தனது பகுதியில் தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். இதனிடையே அந்தப் பகுதியில் ட்ராபிக் இருக்கிறதா என்று கூகுள் மேப் வழியாக பரிசோதனை செய்த இணையவாசிகளுக்கு கூகுள் மேப் சிவப்பு நிற குறியீட்டினை காட்டியுள்ளது.
அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் டிராபிக் இல்லை என்றால் கூகுள் மேப் பச்சை நிற குறியீட்டையும், டிராபிக் இருந்தால் சிவப்பு நிற குறியீட்டையும் காண்பிக்கும். ஆனால் சைமன் 99 செல்போன்களை ஒரு தள்ளு வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டே அந்த சாலையை கடந்தபோது அந்த சாலையில் ஒரிரு வாகனங்களே இருந்தன. ஆனால் கூகுள் மேப்பில் பார்த்தவர்களுக்கு அங்கு டிராஃபிக் இருப்பதை குறிக்கும் வகையில் சிகப்பு நிறம்தான் காட்டப்பட்டது என்பதுதான் ஆச்சரியம். இந்த வகையில் கூகுளையே குழப்பியுள்ள சைமனின் செயல் வைரல் ஆகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிராஃபிக்கின் போது சாலைகளில்'... 'ஹாரன் அடிச்சா கிரீன் சிக்னல் விழாது!'... 'போக்குவரத்து காவல்துறை அதிரடி!'...
- ‘போதும் குடுங்க.. வாட்ஸ்ஆப்ல அனுப்பி வைக்கிறேன்!’ .. ‘செல்ஃபி எடுக்கும்போது செல்போனை தட்டிச்சென்று பறந்த திருடன்!’
- "அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா!"... "அமெரிக்காவை முந்தியது!"...
- “உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா...”... “காதலியிடம் காதலன் போட்ட கட்டளை”.. “அதிரடியாக கைது”!
- உலகின் 'நம்பர் 1' பணக்காரரின் மொபைலை ஹேக் செய்து... 'அந்தரங்க' புகைப்படங்களை... மனைவிக்கு அனுப்பிய இளவரசர்?
- 'ஆஃபீஸ்க்கு போகலாம்ன்னு பாத்தோம்'... 'ஆனா இவ்வளவு தூரத்துக்கு நிக்குதா'?... விழிபிதுங்கிய சென்னை!
- VIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..!
- 'ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள்!'... 'சுங்கச்சாவடிகளில் அவலம்!'... 'போலீஸ் பாதுகாப்பு'...
- ‘எக்ஸாம் ஹாலில் நூதனமுறையில் காப்பி’.. ‘கையும் களவுமாக’ சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த சோகம்..!
- “காலை 7-8 தான் மெயின் டைம்!”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”!