'என் பக்கத்தில் இருக்கும்போதே என்ன காரியம் பண்ற'... 'காட்டிக்கொடுத்த காதலியின் கண்கள்'... அந்த வீடியோவை வெளியிட்டு குமுறிய காதலன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போது எங்கும் மொபைல், எதிலும் மொபைல் என்று ஆகிவிட்டது. இரு உறவுகள் சந்தித்துக் கொள்ளும் போது கூட முகத்தைப் பார்த்துப் பேசும் காலம் மலையேறி மொபைலை பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையே வந்து விட்டது. இதனால் உறவுகளுக்குள் பல பிரச்சனைகள் முளைப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

'என் பக்கத்தில் இருக்கும்போதே என்ன காரியம் பண்ற'... 'காட்டிக்கொடுத்த காதலியின் கண்கள்'... அந்த வீடியோவை வெளியிட்டு குமுறிய காதலன்!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் Sam Nunn. இவரும் அவரது காதலியும் படுக்கையில் படுத்துக் கொண்டு மொபைலை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது அந்த மொபைல் வெளிச்சத்தில் தனது காதலியின் முகம் அழகாகத் தெரிகிறதே என எண்ணிய sam, தனது காதலியை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஏதோ இணையத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார் என எண்ணிய samக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Man claims that he caught his girlfriend swiping through Tinder

sam எடுத்த வீடியோவில் அவரது காதலியின் கண்கள் தெளிவாக பளிச்சென தெரிய, காதலி இணையத்தில் என்ன தேடிக் கொண்டு இருந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது. samமின் காதலி இணையத்தில் துணையைத் தேடும் தளமான, Tinderரில் ஆண்களின் படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அதாவது தனது காதலன் தன்னுடன் இருக்கும் போதே புதிய காதலனைத் தேடிக் கொண்டு இருந்துள்ளதாக, அந்த இளைஞர் குமுறியுள்ளார்.

காதலியின் கண்களில் தெரிந்த அந்த விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ள sam, இதை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, எனது இதயம் உடைந்து விட்டது எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்