'யோவ், என்னயா இது'... 'சார், இது இருந்தாதான் நானும் என்னோட மனைவியும் சந்தோசமா இருப்போம்'... சூட்கேஸை திறந்ததும் அதிர்ந்துபோன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இங்கிலாந்தின் Rugby நகரைச் சேர்ந்தவர் Bojkin. இவர் Slovakia-வில் இருந்து இங்கிலாந்திற்குத் திரும்பிய நிலையில் சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி அவரது உடைமைகளைச் சோதனை செய்துள்ளார்கள். அப்போது அவரது சூட்கேஸை அதிகாரிகள் திறக்கச் சொன்ன நிலையில் Bojkin முதலில் தடுமாறியுள்ளார். பின்னர் அதிகாரிகள் கண்டிப்புடன் கூற வேறு வழியில்லாமல் Bojkin, சூட்கேஸை திறந்துள்ளார்.

திறந்த சூட்கேஸை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். காரணம் அந்த சூட்கேஸை சோதனை செய்ததில் மொத்தமாக 19,840 சிகரெட்டுகள் அதில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இதுகுறித்து சுங்க அதிகாரிகள் கேட்ட நிலையில், ''இதை நான் விற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகக் கொண்டு வரவில்லை என்று Bojkin மறுத்துள்ளார்.

அதோடு இவை அனைத்தும் எனக்கும் எனது மனைவிக்கும் சேர்த்து வாங்கப்பட்டது. இது தான் எங்களுக்குச் சந்தோஷம் அளித்துக் கொண்டு இருக்கிறது''. என Bojkin அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் இந்த சிகரெட்டுகளை நாட்டிற்குள் முறைப்படி, ஒரு வணிக நோக்கத்திற்காகக் கொண்டு வந்தால், 5,817.78 பவுண்ட் வரி செலுத்த வேண்டும்.

இந்நிலையில் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மருத்துவ காரணங்களுக்காக இங்கிலாந்து திரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் குளிர்காலத்தை இங்குச் செலவிட்டுவிட்டு, கோடைக் காலத்தில் மீண்டும் Slovakia-விற்கு செல்வேன் என்று கூறியுள்ளார். தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் இடையே நாள் ஒன்றிற்கு ஐந்து பாக்கெட் சிகரெட்டுகள் புகைப்போம்.

Slovakia-வின் விலை மலிவு என்பதால், அங்கு அதிக அளவு சிகரெட்டுகள் வாங்கினேன். நான் இதைக் இங்கு விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. குளிர்காலத்தில் நான் இப்படி மொத்தமாக சிகரெட்டுகள் வாங்குவேன், இது நான்கு முதல் ஐந்து மாதங்கள் நீடித்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால், Bojkin சிக்குவது இது முதல் முறையல்ல எனவும், இதற்கு முன்பு அவரிடம் இருந்து இது போன்று சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்