அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள்ள நுழைஞ்ச ட்ரக்.. டாப் லெவல் அதிகாரி எல்லாரும் கூடிட்டாங்க.. டிரைவர் சொன்னதை கேட்டு கடுப்பான காவல்துறை.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் விமானப்படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த இளைஞர் சொல்லிய காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கடல் ஆழத்துல இருக்கும் துளைகள்.. "இது எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கே தெரில.. ஆனா அடிக்கடி நடக்குது"..பொதுமக்கள் கிட்ட HELP கேட்ட ஆராய்ச்சியாளர்கள்..!

பொதுவாகவே ஏலியன்களின் இருப்பு குறித்து பலரும் மிகுந்த விருப்பத்துடன் பேசிவருகின்றனர். எது மர்மமாக இருக்கிறதோ அதுவே பல கட்டுக்கதைகளின் தாயகமாகவும் திகழ்கிறது. இது ஏலியன்கள் குறித்த விஷயத்தில் முற்றலும் உண்மை. உலகம் முழுவதிலும் பலர் ஏலியன்கள் இருப்பதாக நம்புகின்றனர். அதற்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தையும் சொல்லி இணையத்தை சில சமயங்களில் அதிரவைக்கவும் இவர்கள் தவறுவதில்லை. ஆனால், இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விமானப்படை தளம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது அமெரிக்க விமானப்படை தளமான Patrick Space Force Base. இந்த தளம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சுமார் 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்குள் சில தினங்களுக்கு முன்னர் 29 வயதான நபர் ஒருவர் ட்ரக்கில் அத்துமீறி நுழைந்திருக்கிறார். இதனால் விமானப்படை தளத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது குறித்து உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சொல்லிய விஷயங்கள் அதிகாரிகளை மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஏலியன்கள்

காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ட்ரக் டிரைவரான கோரி ஜான்சன் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொல்லித்தான் அங்கு வந்ததாகவும் சீன டிராகன்களுடன் சண்டையிடும் வேற்றுகிரகவாசிகள் குறித்து அதிகாரிகளை எச்சரிக்க தன்னை அதிபர் அனுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவர் பிரேவார்ட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ஓட்டிவந்த ட்ரக் சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோரி ஜான்சன் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விமானப்படை தளத்துக்குள் நுழைந்த நபர் ஏலியன்கள் குறித்து எச்சரிக்கை செய்ய வந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட சம்பவம் அமேரிக்கா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | "பத்தே நிமிஷம் தான்".. யாரும் பாக்கலைன்னு பார்சலை திருடிய ஆசாமி.. உரிமையாளர் அனுப்பிய மெசேஜை பாத்துட்டு வெலவெலத்துப்போன திருடன்..

AMERICA, MAN, ARREST, US MILITARY BASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்