‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்து மருத்துவ மாணவியின் உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கடைசி ஆண்டு படித்துவந்த நிம்ரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவருடைய விடுதி அறையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரி நிர்வாகம் அவருடைய மரணத்தை தற்கொலை எனக் கூறிய நிலையில், ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகளும் அதை தற்கொலை என்றே குறிப்பிட்டன.
தொடக்கம் முதலே நிம்ரிதாவின் சகோதரரும், மருத்துவருமான விஷால் இதைக் கொலை எனக் கூறிவந்த நிலையில், இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரினர். இதைத்தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், நிம்ரிதாவின் வகுப்புத் தோழர்கள் 2 பேரைக் கைது செய்தனர். அதில் மெஹ்ரான் அப்ரோ என்பவரை நிம்ரிதா திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், ஆனால் அவர் அதற்கு தயாராக இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிம்ரிதாவின் டிஎன்ஏ மாதிரிகளை தடவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அவருடைய உடல் மற்றும் ஆடையில் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “நிம்ரிதாவின் டிஎன்ஏ அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” எனக் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருமணமாகி ஓராண்டுதான்'... 'இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு'... 'கலங்கி தவிக்கும் பெற்றோர்'!
- ‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..
- ‘இன்குபேட்டரில் வைத்த குழந்தை’... ‘நொடியில்’... ‘தவறி விழுந்து நடந்த சோகம்’... வீடியோ!
- 'ரயிலுக்குள் பயணி செய்த காரியம்'.. அடுத்தடுத்து தீப்பிடித்த ரயில் பெட்டிகள்... 65 பேர் பலியான சோகம்!
- ‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு?’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..
- 'எவ்வளவோ எச்சரித்தும் கேட்காத கணவர்'... '5 வயது மகளுடன், இளம் தாய்’... ‘எடுத்த விபரீத முடிவு'!
- ‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘கராத்தே பயிலும் இடத்தில்’... ‘மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தந்தை செய்த காரியத்தால்’... ‘அதிர்ந்துபோன தாய்’!
- ‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘டிவியில் சுஜித் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த’.. ‘பெற்றோரின் அலட்சியத்தால்’.. ‘2 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..