'கப்பல் மார்க்கமாக'.. சட்ட விரோத நுழைவா? தூத்துக்குடியில் கைதான மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் கப்பல் வழியே தப்பித்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்ததாகவும், அவர் கைதாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அஹமது அதீப் சிறையில் இருந்து விடுதலையானதும், அவர் மீது பல்வேறு தரப்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள புகார்கள் காரணமாக, அவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக தப்பியோடி வந்தடைந்ததாக வெளியான தகவல்கள் கிடுகிடுக்க வைத்தன. தூத்துக்குடியில் இருந்து கல், மணல் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மாலத்தீவுக்கு செல்வதுண்டு. அப்படித்தான் கடந்த 11-ஆம் தேதி கருங்கற்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்ற கப்பல், மீண்டும் 27-ஆம் தேதி அங்கிருந்து திரும்பியது.

விர்கோ-9 என்கிற சிறிய வகை கப்பல் ஒன்றில் 9 பேருடன் திரும்பிய அந்த கப்பலில், 10-ஆவது ஆளாக மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அஹமது அதீப்பும் தப்பி தூத்துக்குடிக்கு வந்தடைந்ததாக தகவல்கள் வந்ததை அடுத்து, கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் குடியேற்றத்துறை அதிகாரிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில், கடலின் மீது மிதக்கும் கப்பலை மறித்து உளவுத்துறையினர் விசாரித்தனர். 

அதன் பின்னர் அஹமது அதீபை கைது செய்து, அவருடைய விபரங்களை சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், சட்டத்துக்கு புறம்பாக, மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் இந்தியாவின் எந்த எல்லையிலும் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த தகவலை தமிழக பத்திரிகையாளர் ஒருவரும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

MALDIVES, ILLEGAL, SHIP, TUTUCORIN, THOOTHUKUDI, ISLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்