VIDEO: 'கண்ணான கண்ணே... என் தோள் மீது சாய வா!'.. மகன் துபாயில்... அம்மா மலேசியாவில்... தவமாய் தவமிருந்து... மகனை மீட்டு எடுத்த... தாயின் பாசப் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய தாயாருடன் 9 வயது மகனை சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் துபாய் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்டு வசித்து வருபவர் ரோஸ் ஹு (வயது 38). தனது 45 வயதுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதில் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதால் அவரது கணவர் 9 வயது மகனை தன்னுடன் துபாய் அழைத்து வந்து விட்டார்.
அந்த நேரத்தில் அவருக்கு துபாயில் பயணத்தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரால் மீண்டும் மலேசியா செல்ல முடியவில்லை. தனது மகனுடன் ரோசின் கணவர் துபாயிலேயே வசித்து வந்தார்.
துபாய் நீதிமன்றத்தில் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரோஸ் ஹு வழக்கு தொடர்ந்தார். முதலில் கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் மேல்முறையீடு செய்தார். அதில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி மகனை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவரால் துபாய் வர முடியவில்லை. மகனை பிரிந்து இருக்க முடியாமல் தன்னிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஜூலை 8-ந் தேதி விசிட் விசாவில் துபாய்க்கு ரோஸ் வந்தார்.
தொடர்ந்து விசாவை புதுப்பித்து மகனுடன் மலேசியா செல்ல காத்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை வைத்து வழக்கறிஞர்கள் உதவியுடன் போலீசாரிடம் தன் மகனை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், நேற்று காலை துபாய் போலீசாரிடம் இருந்து மகனை அழைத்து செல்லும்படி தொலைபேசி மூலம் ரோசுக்கு அழைப்பு வந்தது.
போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர் 2 ஆண்டுகள் பிரிந்து இருந்த மகனை சந்தித்தார். அப்போது கண்ணீருடன் கட்டியணைத்தது பார்ப்பவர்களை நெகிழச்செய்தது.
தந்தையிடம் இருந்த சிறுவனின் பாஸ்போர்ட் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர் மல்க மகனை அழைத்து சென்ற ரோஸ் போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’
- ‘இப்டியே நீங்க’...!! ‘தன் முன்னாள் அணிக்கு’...! ‘வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய’...! ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...!!!
- தலைவலி மாத்திரைன்னு தான் நெனச்சோம்.. ‘ஆனா..!’ பெற்ற ‘மகனால்’ நேர்ந்த கொடுமை.. கண்ணீர் மல்க பெற்றோர் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!
- Video : "ஓஹோ,,.. இதுக்காக தான் அங்க 'wait' பண்ணிட்டு இருக்கீங்களா??..." மைதானத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள்,,.. வைரல் 'வீடியோ'!!!
- 16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’!.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா..! இப்போ குடும்ப தொழிலே இதுதான்..!
- அப்பா ‘உயிரை’ காப்பாற்றிய மகன் கொடுத்த ‘கிஃப்ட்’.. வாழ்க்கையை நொடியில் மாற்றிய அந்த ‘பொருள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- "'சிஎஸ்கே'க்கு 'ரெய்னா' போனா என்ன??.." அதான் 'பஞ்சாப்'க்கு 'ரியானா' கெடச்சுட்டாங்களே.." மீண்டும் வைரலாகும் 'சூப்பர்' ஓவர் 'Girl'!!!
- #VIDEO: 'தாய்' பாசத்துக்கு 'ஈடேதம்மா!'.. 'நெகிழ்ந்து' அழுத 'மகன்'!.. 'இதயம்' தொடும் 'சர்ப்ரைஸ்' வீடியோ!
- 2-வது கல்யாணத்துக்கு ரெடியான ‘அப்பா’.. தடுத்த மகனுக்கு நேர்ந்த கொடுமை..!
- VIDEO : நைட் தொலைஞ்ச ஃபோன் 'காலை'ல கெடச்சுது,,.. 'திருட்டு' போன மொபைல 'செக்' பண்ண 'இளைஞருக்கு',,.. காத்திருந்த 'அதிர்ச்சி' கலந்த 'ஆச்சரியம்'!!! - வைரலாகும் 'வீடியோ'