'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது பரவிவரும் கொரோனா வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதல்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மாதக்கணக்கில் போராடியும், ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இன்னும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.
இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட புதிய கொரோனா வைரஸை மலேசியா கண்டுபிடித்துள்ளது. 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் மாற்ற டி614ஜி என அழைக்கப்படுகிறது. இதுவரை அங்கு 45 நோயாளிகளிடம் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற சிவகங்கையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரால்தான் இந்த புதிய வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டும், அதை மீறியதால் அவருக்கு 5 மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர்களிடமும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்பைவிட வேகமாக பரவும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவரும் தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம் எனக் கூறப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...
- 'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்?' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்!'...
- 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை!'...
- 'பெரும்பாலும் இந்த வரிசையில தான் அறிகுறிகள் உண்டாகுது'... 'புதிய தகவலுடன் நம்பிக்கை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்!'...
- “எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா?”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்!
- “அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?
- மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா? கலக்கத்தில் சீனா!
- உலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்?... வெளியான புதிய தகவல்!