கடனில் மூழ்கிய Coffee Day நிறுவனத்தை தனியாளாக மீட்டெடுத்த சிங்கப்பெண் மாளவிகா ஹெக்டே..!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவின் மிகப்பெரிய காபி ஷாப் செயின் நிறுவனமான கபே காபி டே நிறுவனத்தின் தலைவர் V G சித்தார்த்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர் காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடட் (CDEL) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மறைந்த சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertising
>
Advertising

"பிசினசை லாபகரமானதாக மாற்ற தவறிவிட்டேன்" என இறப்பதற்கு முன்பு சித்தார்த்தா எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் பெயரில் அவருக்கு இருந்த கடன்கள் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகள், வருமானவரித்துறையினரின் குற்றச்சாட்டுகள் ஆகியவை தம்மை நிலைகுலைய வைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

நாடுமுழுவதும் 165 நகரங்களில் 572 கபேக்களை இந்த நிறுவனம் நடத்திவந்த வேளையில் அதன் தலைவர் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி காபி டே நிறுவனத்திற்கு 7000 கோடி கடன் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் மாளவிகா ஹெக்டே தலைமைப்பொறுப்புக்கு வந்தார்.

என்னது மலைப்பாம்பு மனுசனை விழுங்கிடுச்சா..? தீயாய் பரவிய வதந்தி.. கடைசியில் தெரியவந்த உண்மை..!

அதீத கடன், முதலீட்டாளர்களின் அதிருப்தி என அவருக்கு முன்னால் இருந்த சவால்கள் ஏராளம். ஆனால் தெளிவான பார்வையுடன் இயங்கத் துவங்கினார் மாளவிகா. அடிப்படைகளை துணிவாக மாற்ற முடிவெடுத்ததன் பலனாக 2020 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் கடன் தொகை 2,909.95 கோடியாகக் குறைந்தது.

இந்நிலையில் 2021 மார்ச் 31 ஆம் தேதி காபி டே நிறுவனத்தின் கடன் தொகையை 1,731 கோடியாகக்  குறைத்துள்ளார் ஹெக்டே. கடந்த ஆகஸ்டு மாதம் இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கடன்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் மீண்டும்  வளர்ச்சிப்பாதைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடனில் தத்தளித்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு மாளவிகா ஹெக்டே வருகையில் யாரெல்லாம் ஏளனம் செய்தார்களோ? யாரெல்லாம் அவரால் முடியாது என நினைத்தார்களோ? அவர்களது முன்னிலையில் துணிவுடன் முன்னேறிவரும் நிஜ சிங்கப்பெண்ணாக இன்று வலம் வருகிறார் மாளவிகா ஹெக்டே.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.. ‘எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பஸ் ஏறணும்..?’ முழு விவரம்..!

MALAVIKA HEGDE, CEO OF CCD, மாளவிகா ஹெக்டே, கபே காபி டே, காபி ஷாப் செயின்

மற்ற செய்திகள்