'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதையும் கொரோனா தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு மருந்து எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே கொரோனா, மலேரியா என இரண்டு நோய்களுக்கு மத்தியில் சிக்கித்தவித்து வருகிறது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் இந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா அதிகமாக காணப்படும்.
தற்போது இந்நாடு மலேரியாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதுவரை சுமார் 153 பேர் மலேரியாவுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 1.35 லட்சம் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரம் கொரோனாவும் இந்த நாட்டில் அதிகமாக பரவி வருகிறது. தற்போதுவரை இங்கு 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சுமார் 3 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இதுதவிர கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து இங்கு ஊரடங்கு அமலில் இருப்பதால்,சுமார் 1கோடி பேர் வேலையிழந்து வருமானமின்றி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதனால் அதிக உயிர்ப்பலி வாங்கப்போவது வறுமையா? மலேரியாவா? கொரோனாவா? என்ற அச்சத்தில் ஜிம்பாப்வே மக்கள் உறைந்துபோய் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கடைகள் மூடியிருந்தால் என்ன?’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’!
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- ‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’!
- "இப்ப திருப்திதானே?".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்!
- 'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு!.. என்ன நடந்தது?
- 'ஆயிரக்கணக்கான' உயிர்கள் பறிபோக 'காரணமான...' 'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...' 'அமெரிக்க' வெளியுறவு அமைச்சர் 'மைக்பாம்பியோ' எச்சரிக்கை...
- ‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’!
- 'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்!'.. வீடியோ!
- மற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'
- 'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா?... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்கள்'...