கணவரைப் பற்றி மலாலா செய்த ட்வீட்.. Poll வச்சு கருத்து கேட்ட கணவர்😅.. வைரல் போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானை சேர்ந்த பெண் உரிமை போராளியான மலாலா தனது கணவர் பற்றி ட்வீட் செய்திருந்த நிலையில் அவரது கணவர் இதுபற்றி Poll ஒன்றையும் நடத்தியிருக்கிறார். இது இணையவாசிகள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்".. இந்திய வீரர் பத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சொன்ன விஷயம்..!

பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா. சிறுவயதில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்து போராடி வந்தார். இவரை கவுரவப்படுத்தும் விதமாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து,பெண்ணுரிமை குறித்து அவர் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் அஸ்ஸர் மாலிக்கிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது ஒன்றாக வசித்துவரும் நிலையில் மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில்,"சோபாவில் பழைய சாக்ஸ் ஒன்று கிடந்தது. அஸ்ஸரிடம் இது உங்களுடையதா? என கேட்டேன். அவர் ஆமாம், அது அழுக்காக இருக்கிறது. அதனை வெளியே தூக்கி எறியவேண்டும் எனச் சொன்னார். நான் அதனை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலான நிலையில் மலாலாவின் கணவர் அஸ்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில் poll ஒன்றையும் துவங்கி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில், "சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?" என கேள்வி எழுப்பி இரண்டு ஆப்ஷன்களையும் கொடுத்திருந்தார். முதலாவதாக வெளியே தூக்கி எறியவேண்டும் எனவும் இரண்டாவதாக குப்பைத் தொட்டியில் போடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பெரும்பாலான ட்விட்டர் வாசிகள் இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, "மலாலா செய்தது சரிதான்" என்றும், "வீட்டு வேலைகளை கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும்" எனவும் "திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதிகள் சந்திக்கும் முதல் சிக்கல் இப்படித்தான் இருக்கும்" எனவும் நெட்டிசன்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | பிரசவ வலியால் துடிச்ச கர்ப்பிணி.. பனியால் ஸ்தம்பிச்ச போக்குவரத்து.. தோளில் சுமந்து சென்று இரண்டு உயிர்களையும் காப்பாத்திய ராணுவ வீரர்கள்..!

MALALA YOUSAFZAI TWEET, HUSBAND, ASSER MALIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்