முடியலங்க, ரொம்ப 'வேதனையா' இருக்கு...! 'ப்ளீஸ்... ஏதாச்சும் உடனே பண்ணுங்க...' - மனம் நொந்து பதிவிட்ட மலாலா...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான் தீவிரவாத படையினர் ஆப்கானில் இனி செய்யவிருக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் கவலை ஏற்படுவதாக மலாலா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபான் தீவிரவாத படைக்கும் ஏற்பட்ட உள்நாட்டு போரில், தற்போது தலிபான் படை தலைநகர் காபூலை சுற்றி வளைத்துள்ளது.

அதோடு, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்து விட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தங்கள் இடைக்கால தலைவரை அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த உலகையே ஆப்கானிஸ்தானை நோக்கி உற்று கவனிக்க வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்படும் இந்நிகழ்வு குறித்து மலாலா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. அந்நாட்டில் இருக்கும் பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு தேவை.

உலகத் தலைவர்கள் ஆப்கானில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்து, மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்' என தன் ட்விட்டர் பக்கம் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்