இல்ல... எனக்கு புரியல...! எதுக்கு அந்த மாதிரி பண்ணனும்...? மலாலாவிடம் கேட்கப்பட்ட 'அந்த' கேள்வி...! - 'பதிலைக்' கேட்டு கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், 15 வயதுச் சிறுமியாக இருந்த போது, அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் பள்ளிக்கூடத்தில் தாக்குதல் நடத்தினர். அப்போது மலாலா கழுத்தில் குண்டு பாய்ந்தது, ஆனால் அந்த தாக்குதலில் இருந்து மலாலா உயிர் தப்பினார். அதன்பிறகு, மலாலா பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாக மலாலா, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார். சில மாதங்களுக்கு முன்னர்தான் மலாலா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உலகளவில் பிரபல நாளிதழான 'வோக்' இதழில் மலாலா நேர்காணல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளில் திருமணம் குறித்த கேள்வியும் ஒன்று.

அந்த கேள்விக்கு மலாலா, 'மக்கள் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என இதுவரை எனக்கு புரியவில்லை. இரு நபர்கள் இணைந்து வாழ்வதற்குத் திருமணம் அவசியமா என்ன?

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள். அப்படி இருக்க ஏன் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுத் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? அப்படி செய்யாமல் நீங்கள் ஏன் ஒரு துணையாளராக வாழ்க்கையைத் தொடரக் கூடாது'  என்று பதிலளித்தார்.

இதனை பிடித்துக்கொண்ட பாகிஸ்தான் நெட்டிசன்கள், மலாலா திருமணத்துக்கு எதிராகப் பேசிவிட்டார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்