'இப்படி ஒரு செய்தி வரும்ன்னு கனவுல கூட நினைக்கல'... 'பேரதிர்ச்சியில் கமலா ஹாரிஸ்'... கொந்தளிக்கும் அமெரிக்க மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதற்கு முழு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்ற குரல் அந்நாட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தனது படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது. 90 சதவீத படைகள் தாய் நாட்டிற்குத் திரும்பி விட்ட நிலையில், தாலிபான்கள் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். தற்போது முழு ஆப்கானிஸ்தானும் அவர்களது கைகளுக்குச் சென்று விட்ட நிலையில், இனிமேல் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு அந்நாட்டு மக்களிடையே நிலவுகிறது.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ரீதியில் மக்கள் அமெரிக்க விமானத்தில் ஏறிய காட்சிகளைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இனிமேல் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சத்தில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய காட்சிகளைப் பார்த்த உலக மக்கள் பலரும், ஆப்கான் மக்களின் இந்த நிலைக்கு அமெரிக்கா தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்கள்.
இதே குரல் தான் தற்போது அமெரிக்காவில் எங்குப் பார்த்தாலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு எதிர்பாராதவிதமாக இந்திய வம்சாவளியினரான அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 49 சதவிகிதம் அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராவதற்குத் தகுதியுடையவர் எனக் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்களுடைய ஆதரவு குறைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பதற்கு முன், அதிபருடன் அந்த அறையிலிருந்த கடைசி நபர் நான்தான் எனப் பெருமையாகக் கூறியிருந்தார் கமலா. ஆனால், அந்த முடிவு தனது செல்வாக்கை இந்த அளவிற்குப் பாதிக்கும் என கமலா கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
ஏப்ரலில் கமலா ஹாரிஸ் அதிபராவதற்குத் தகுதியுடையவர் என 49 சதவிகிதம் மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது 47 சதவிகிதம் பேர், கமலா அதிபராவதற்குத் தகுதியில்லாதவர் என வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், எந்த நிகழ்ச்சியானாலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அருகிலேயே நிற்கும் கமலா, ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதில்லை என்ற பரவலாகப் பேசப்படுகிறது.
அரசியலில் தவறாக எடுக்கப்படும் முடிவு, ஒரே நாளில் இதுவரை சம்பாதித்து வைத்திருந்த செல்வாக்கைத் தவிடு பொடியாக்கும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆப்கானில் இருந்து தப்பி ஓட துடிக்கும் மக்கள்!.. தூக்கிவிட ஆள் இல்லாத துயரம்!.. இறுதி நேரத்தில் கைவிரித்த அமெரிக்கா!.. கண்ணீர் பின்னணி!
- 'நெலமை கைய மீறி போயிடுச்சு'!.. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!.. தாலிபான்களிடம் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை!.. மாஸ்டர் ப்ளான்!
- ‘தப்பான திசையில போய்ட்டு இருக்கோம்’!.. இனி தடுப்பூசியே போட்டாலும் ‘இது’ கட்டாயம்தான்.. அமெரிக்க அரசு அதிரடி..!
- அமெரிக்காவில் 83% கொரோனா பாதிப்புக்கு இந்த வகை ‘வைரஸ்’ தான் காரணம் .. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் முக்கிய தகவல்..!
- ஐடி ஊழியர்கள் ஷாக்!.. வெறும் 4 பேரை வைத்து... அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!.. "மைக்ரோசாஃப்ட் நிறுவனம் HACKED"!
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- 'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 'கைது வாரண்ட்'!.. சரியான டைமிங்!.. ஸ்கெட்ச் போட்டு பழிவாங்க துடிக்கும் 'எதிரி'கள்!.. என்ன செய்யப்போகிறார் டிரம்ப்?
- 10 ஆண்டு பகை... பழி வாங்க துடிக்கும் அமெரிக்கா!.. விட்டுக் கொடுக்க மறுக்கும் இங்கிலாந்து!.. யார் இந்த ஜூலியன் அசாஞ்சே?.. அப்படி என்ன செய்தார்?
- 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு!'.. தேர்தல் அதிகாரியிடம் டிரம்ப் ரகசிய பேச்சுவார்த்தை!.. கசிந்தது ஆடியோ பதிவு!.. அமெரிக்காவில் பரபரப்பு!