Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனில் இருந்து போர் காரணமாக வெளியேறிய மாணவர்களில் 800 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்த பெண் விமானியான மகாஸ்வேதா சக்கரவர்த்திக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
போர்
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நாள்தோறும் மோசமடைந்து வருகிறது. இந்தப் போரினால் சுமார் 15 லட்சம் உக்ரைனிய மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல, உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது.
இதனை அடுத்து போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ரோமானியா உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் இடம் பெயர்ந்தனர். இவர்களை மீட்க இந்திய அரசு 'ஆப்பரேஷன் கங்கா' என்னும் மீட்பு திட்டத்தை துவங்கியது.
மீட்பு நடவடிக்கை
இதுவரையில் இந்த சிறப்பு மீட்புத் திட்டத்தின் கீழ் 75 விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது. இதன்மூலம் உக்ரைனில் சிக்கிக்கொண்ட சுமார் 14,000 இந்தியர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியில் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருபவர் தான் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மகாஸ்வேதா, மேற்கு வங்க மாநில பாஜக மகளிரணி தலைவர் தனுஜா சக்கரவர்த்தியின் மகளாவார்.
கடந்த நான்கு வருடங்களாக இண்டிகோ நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வரும் மகாஸ்வேதா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதிவரையில் மொத்தம் 6 முறை மீட்பு விமானங்களை இயக்கி இருக்கிறார். இவற்றுள் போலந்தில் இருந்து நான்கு முறையும் ஹங்கேரியில் இருந்து இரண்டு முறையும் இந்தியாவிற்கு விமானங்களை செலுத்தி இருக்கிறார்.
பெருமை
இதுபற்றி பேசிய மகாஸ்வேதா," இது ஒரு வாழ்நாள் அனுபவமாகும். இளம் மாணவர்கள் அதிர்ச்சியுடனும் சிலர் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆனால், அவர்களின் மன உறுதிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக பெருமையடைகிறேன்" என்றார்.
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட மகாஸ்வேதா கொரோனா காலத்தில் இந்திய அரசு அறிவித்த சிறப்பு விமான போக்குவரத்து சேவையான 'வந்தே பாரத்' திட்டத்திலும் பணிபுரிந்து இருக்கிறார்.
மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்து பேசிய மகாஸ்வேதா,"சமூகத்திற்கு என்னால் செய்ய முடிந்த பங்களிப்பினை அளிக்க முடிவதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் பசி, தாகம், மரண அச்சுறுத்தல்கள், தீவிர வானிலை மற்றும் தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் போராடிய இந்த இளம் மாணவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் சூழ்நிலையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது" என்றார்.
உக்ரைனின் அண்டை நாடுகளில் சிக்கி இருந்த 800 மாணவர்களை மீட்ட விமானியான மகாஸ்வேதாவை அனைவரும் சமூக வலைத் தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெரும் சோகம்! 5 இந்திய மாணவர்கள் மரணம்.. கனடா இந்திய தூதர் வெளியிட்ட செய்தி..! நடந்தது என்ன?
- "அத நெனச்சாலே பயமா இருக்கு"...உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் பிரதமர் மோடிக்கு வைத்த பரபரப்பு கோரிக்கை..!
- அம்மாவுக்கு மருந்து வாங்கணும்.. திடீர்னு சுத்தி வளச்ச ரஷ்ய வீரர்கள்.. பிறந்தநாள் அன்னிக்கு உக்ரைன் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..!
- “நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
- ‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..!
- முன்னேறும் ரஷ்ய ராணுவம்.."உடனே லேப்-ல இருக்கத எல்லாம் அழிச்சிடுங்க" உக்ரைனுக்கு WHO எச்சரிக்கை..!
- என்னது உக்ரைனுக்கு ஆதரவாக இவர் களத்துல இறங்கிட்டாரா.. அப்பவே வேறலெவல் சம்பவம் பண்ணவராச்சே..!
- "உக்ரைன்-ல அந்த குண்டை யூஸ் பண்ணோம்னு ரஷ்யா கன்ஃபர்ம் பண்ணிடுச்சு ".. பிரிட்டன் பாதுகாப்புத்துறை போட்ட பரபரப்பு ட்வீட்..!
- விமானம் ஏறிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. "இந்த வாய்ப்பு எல்லாம் எங்களுக்கு எப்போ கிடைக்குமோ??".. ஏங்கும் நெட்டிசன்கள்
- "தலைநகருக்கு உள்ள வந்துடுச்சு அந்த க்ரூப்.. தயாரா இருங்க"..உக்ரைன் அதிபருக்கு உளவுத்துறை அனுப்பிய சீக்ரட் மெசேஜ்..!