கடலில் விழுந்த ஹெலிகாப்டர்.. 12 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்த அமைச்சர்.. எப்படி சாத்தியமானது?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, இரு தினங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல் படையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த விபத்தின் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 60 - ஐ தாண்டியதாக கூறப்படும் நிலையில், 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன மீதமுள்ளவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக, காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே, ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது, இந்த ஹெலிகாப்ட்டர் மீட்புப் பணி நடைபெறும் பகுதிக்கு மேல் பறந்த போது, திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மறுகணமே, இந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்துள்ளது. இதனால், அதிலிருந்த காவலர்கள் மற்றும் மந்திரி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், மந்திரி செர்ஜ் கெல்லே மற்றும் ஒரு காவலர் ஆகியோர், சுமார் 12 மணி நேரம் கடலில் நீந்தி, கடற்கரை நகரமான மஹம்போவில் தனித்தனியாக கரையேறினர். அதிக நேரம், நீரில் நீந்தி வந்ததால், சோர்வுடன் காணப்பட்ட அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கபட்டது.
மேலும், ஹெலிகாப்டர் கடலில் விழுவதற்கு முன்பாகவே, மந்திரி மற்றும் அந்த காவலர் வெளியே குதித்து விட்டனர். ஹெலிகாப்டரில் பயணித்த மேலும் இரண்டு காவலர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரைக்கு வந்து சேர்ந்த மந்திரி செர்ஜ் கெல்லே, ஈஸி சேர் ஒன்றிலிருந்து பேசும் வீடியோ, இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
இதுபற்றி காவல்துறை தலைவர் ரேவோவரி பேசுகையில், 'காவல்துறை மந்திரி கெல்லே ஹெலிகாப்டர் இருக்கையை மிதக்கும் பொருளாக பயன்படுத்தி நீந்தியே கரைக்கு வந்துள்ளார். அதிக ஸ்டாமினா உடைய கெல்லே, முப்பது வயது வாலிபரைப் போன்று, இப்போதும் உடற்திறனுடன் இருக்கிறார். அதனால் தான் அவரால் நீந்தி வர முடிந்தது' என தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக, காவல்துறையில் பணியாற்றிய கெல்லே, கடந்த ஆகஸ்ட் மாதம் மந்திரிசபை மாற்றத்தின் போது, காவல்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தீவிர சிகிச்சையில் இருந்த கேப்டன் வருண் காலமானார்..!
- "நம் ராணுவப் படைகளைக் கண்டு பெருமைப்படுகிறேன்..."- உருக்கமான பிபின் ராவத்-ன் கடைசி உரை
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. விசாரணையில் வெளியான புதிய தகவல்! நடந்தது என்ன?
- ஹெலிகாப்டர் விபத்து : உடல்களுடன் சென்ற அமரர் ஊர்தி.. விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்...!
- அப்படியே புடிச்சு மேல வாங்க சார்...! 'வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர்...' 'பதறிப்போன மக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
- கேரள அமைச்சரவை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. யார் இந்த வீணா ஜார்ஜ்..? வெளியான சுவாரஸ்ய பின்னணி..!
- பாஜக வீசிய பந்தில்... சிக்ஸர்களை பறக்கவிட்ட மனோஜ் திவாரி!.. முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு... முதல்வர் மம்தா கொடுத்த 'வாவ்' சர்ப்ரைஸ்!
- "இது அமைச்சர் பதவி அல்ல... முள்கிரீடம்!.. கொஞ்சம் மிஸ் ஆனாலும்"... கொரோனா காலத்தில்... சுகாதாரத்துறை மா. சுப்பிரமணியனிடம் கொடுக்கப்பட்டது ஏன்?
- "கொரோனாவால் வாழ்வாதாரம் போச்சு"... 'நிதிச்சுமையில் தமிழகம்'... 'சவால்களை எதிர்கொள்ளும் புதிய நிதியமைச்சர்... யார் இந்த பழனிவேல்ராஜன்? - ஆச்சர்ய பின்னணி!!
- 'அய்யய்யோ வரிசையில நிக்குறது யாருன்னு தெரியுதா'?... 'பதறிய அதிகாரிகள்'... 'ஆர்டிஓ' அலுவலகத்தில் நடந்த ருசிகரம்!