அக்கா கூட வந்த போட்டி.. குட்டி Flight-அ எடுத்துக்கிட்டு கிளம்புன சிறுவன் செஞ்ச 2 உலக சாதனை.. கின்னஸ் நிர்வாகமே மிரண்டு போய்டுச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கிலாந்தை சேர்ந்த மேக் ரூதர்போர்டு என்பவர் இரண்டு உலக சாதனைகளை படைத்திருக்கிறார். இதற்கு முழு காரணமாக அமைந்திருந்திருக்கிறார் அவரது மூத்த சகோதரி.
Also Read | "கடைசிவரை போராடி பார்த்தோம்".. கடலில் மூழ்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
உலக சாதனை
இங்கிலாந்தை சேர்ந்த மேக் ரூதர்போர்டுக்கு தற்போதைய வயது 17 ஆகும். இவருடைய மூத்த சகோதரி சாரா இந்த ஆண்டு துவக்கத்தில் 2 உலக சாதனைகளை படைத்திருந்தார். மிக இளம் வயதில் உலகை விமானத்தில் சுற்றிவந்த பெண் என்னும் சாதனையை அவர் படைக்க, அதனால் உத்வேகம் அடைந்த மேக் தானும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். தனியாளாக உலகை சுற்றிவர நினைத்த அவர் அதற்காக சிறிய விமானம் ஒன்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பிறந்த மேக்-கின் பெற்றோரில் ஒருவர் பெல்ஜியத்தையும் மற்றொருவர் பிரிட்டனையும் சேர்ந்தவர். சிறுவயது முதலே விமான இயக்கத்தில் ஆர்வமாக இருந்த மேக், தனது சகோதரியின் சாதனையால் பெருமளவில் உத்வேகம் அடைந்திருக்கிறார். இதனையடுத்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி பல்கேரியாவில் உள்ள சோபியா என்னும் இடத்தில் இருந்து தனது பயணத்தை துவங்கியுள்ளார் மேக்.
பயணம்
தனிநபராக விமானத்தை இயக்கிய மேக், 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இறுதியாக ஆகஸ்டு 24 ஆம் தேதி அவர் மீண்டும் சோபியாவில் தனது விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதன்மூலம் 2 கின்னஸ் சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். அதாவது மிக இளம் வயதில் தனியாளாக உலகை சுற்றிவந்த நபர் மற்றும் குறைவான இரவு நேரங்களில் பயணித்து உலக சுற்றிவந்த இளவயது நபர் என்ற இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.
மேக் பயணித்த விமானம் மிகவும் சிறியது என்பதால், இரவு நேரங்களில் பெரும்பாலும் தனது பயணத்தை தவிர்த்திருக்கிறார். பகலில் மட்டுமே பயணம் செய்த மேக், தனது அனுபவங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். இதனால் இவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மொத்தமாக 6 மாத காலத்தில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். சுவாரஸ்யமாக தனது 17 வது பிறந்தநாளை அவர் அந்த குட்டி விமானத்திலேயே கொண்டாடியிருக்கிறார்.
முந்தைய சாதனை
முன்னதாக டிராவிஸ் லுட்லோ என்னும் இளம் விமானி கடந்த 2021 ஆம் ஆண்டு 24,900 மைல்கள் பயணம் செய்திருந்தார். அப்போது அவருடைய வயது 18 வருடங்கள் மற்றும் 150 நாட்கள் ஆகும். இந்நிலையில், இந்த சாதனையை 17 வருடங்கள் மற்றும் 64 நாட்கள் வயதில் முறியடித்திருக்கிறார் மேக். இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.
Also Read | குழந்தைகளுக்கு பரவும் 'தக்காளி காய்ச்சல்'.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவசர அட்வைஸ்.. முழுவிபரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி.. "அப்படி என்னங்க பண்ணாங்க??"
- 37,000 அடிக்கு மேல பறந்த 'விமானம்'.. தூங்கிய விமானிகள்.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
- இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?
- "இது தான் அம்மா மாதிரி ஆகுறதா??.." இணையவாசிகள் இதயத்தை வென்ற சம்பவம்.. அசத்திக் காட்டிய தாய் - மகள் காம்போ
- சிவப்பு நிறத்துல மாறிய மேகம்.. பதைபதைத்துப்போன விமானி.. உலகையே ஸ்தம்பிக்க வச்ச சம்பவம்..!
- Take Off ஆன 15 நிமிஷத்துல விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. இறுதி நேரத்திலும் அவர் எடுத்த முடிவு.. கவலையில் மூழ்கிய விமான நிலையம்..!
- "இந்த தருணத்துக்காக பல வருஷம் காத்திருந்தேன்".. அம்மா, அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- 2-வது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி.. சர்ப்ரைஸ் விசிட் அடிச்ச தல தோனி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- உள்ளே நுழைஞ்சவங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்.. "இதுக்கெல்லாம் காரணம் அந்த பொம்பள தான்"..1000 வருஷமா ஊர் மக்களை துரத்தும் சாபம்..!
- இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த BCCI ?... இதுதான் காரணமா?