இன்னும் ‘கொரோனா’ பரவல் முடியல.. ‘காதலர் தினம்’ கொண்டாட்டத்துக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை நாட்டில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் காதலர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வரும் 14-ம் தேதி தடையை மீறி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களும், அதில் பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இலங்கை காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோகன, ‘சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம். இதனை மீறி கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இலங்கையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது காதலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்