லண்டனில் இருந்த காதலிக்காக காதலன் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்து கலங்கிய பெண்!!
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைதளங்களில் நாள் தோறும் எக்கச்சக்கமான விஷயங்கள் வைரல் ஆகி வரும் சூழலில் காதல் தொடர்பான வீடியோக்களுக்கும், செய்திகளுக்கும் கூட மிக முக்கியமான இடமுண்டு.
Also Read| போனில் அழைத்து வர்ணனை செய்வதை பாராட்டிய MS தோனி.. மனம் நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக்!!
இந்த உலகில் அனைத்து இடங்களிலும் காதல் நிரம்பி இருக்கிறது. உன்னதமான காதல் என்று உணர்வுக்கு வயதோ, மதமோ, மொழியோ, இனமோ எந்த ஒரு விஷயமும் தடையாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து இரு மனதுக்கும் இடையே உருவாகும் உன்னதமான உணர்வு தான் 'காதல்'.
கடந்த மாதம், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு எக்கச்சக்கமான மனம் நெகிழ வைத்த காதல் தொடர்பான சம்பவங்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. காதலர் தினம் சீசன் இல்லை என்றால் கூட அவ்வப்போது தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வது தொடர்பான ஏராளமான விஷயங்களையும் எமோஷனலாக இருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நாம் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பார்க்க முடியும்.
காதலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
தன் மனதுக்கு மிக நெருக்கமான ஒருவருக்காக எந்த அளவுக்கு அசத்தலான ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதனை மெல்ல மெல்ல யோசித்து மிக வித்தியாசமாக ஏதாவது ஒன்றை காதலில் இருப்பவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்
அந்த வகையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கும் தனது காதலிக்காக, காதலன் ஒருவர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அருகே இருக்கும் ஒரு நபருடன் காதலில் இருந்தாலே அந்த உணர்வு மிக உன்னதமாக இருக்கும். ஆனால் அதே வேளையில் தன்னிடமிருந்து மிக தொலைவில் காதலியோ, காதலனோ இருக்கும் போது அவரை அடிக்கடி சந்திக்க முடியாமலும் போனில் மூலமே குரலை கேட்டும், வீடியோ காலில் பார்த்தும் இருக்கும் சமயத்தில் மிக மிக வேதனை நிறைந்து அதே வேளையில், இருவருக்கும் இடையேயான காதலை இன்னும் அதிகரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.
தொலைதூர காதல்
இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, ஜிபின் என்ற கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர் லண்டனில் இருக்கும் தனது காதலிக்காக அசத்தலான சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதற்காக தனது காதலியுடன் இருக்கும் அவரது தோழி ஒருவரை தொடர்பு கொண்டு தான் தேவையான பணத்தை அனுப்பி விடுவதாகவும் தனது சார்பாக கிரீட்டிங் கார்டு மற்றும் பொக்கே உள்ளிட்ட விஷயங்களை வாங்கி அவருக்கு சர்ப்ரைஸ் ஆக கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜிபின் கூறியது போலவே, அந்த பெண்ணும் ஜிபின் காதலிக்கு கிரீட்டிங் கார்டு உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க இதனைக் கண்டு கண்கலங்கி போய் உள்ளார் அந்த காதலி. காதலன் அருகே இல்லை என்ற போதிலும் இத்தனை மைல் தூரம் கடந்து அவர் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என நினைத்த விஷயத்தை செய்து அருகே இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ள விஷயம், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
Also Read | அவுட் அப்பீல் செய்யும் விஷயத்தில்.. இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் செஞ்ச தந்திரம்.. பரபர பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. அதிகாரிகள் முன்னிலையில் காதலியை கரம்பிடித்த 75 வயது முதியவர்.. நெகிழ்ச்சி பின்னணி..!
- அஞ்சு வருசமா உருகி காதலிச்ச இளம் பெண்ணை.. பட்டப்பகலில் கொலை செய்த இளைஞர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!
- "என் காதலிக்கு எப்படி மெசேஜ் பண்ணுவ?" நண்பனைக் கொன்ற இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!!
- துபாயில் காதலித்த காதலனை.. சொந்த ஊருக்கு அழைத்த இளம்பெண்.. நம்பி விமானத்தில் வந்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
- தனது காதலிக்கு மெசேஜ் செய்து.. தொல்லை கொடுத்த நண்பனை கொன்று.. "இதயத்தை வெளியே எடுத்து".. குலைநடுங்க வைத்த இளைஞர்!!
- பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..
- "உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்".. வேலைக்கு போயிட்டு வர்ற் மனைவி வீடியோவை எடிட் செஞ்சு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ!!
- நம்பி காதலிச்ச பொண்ணு.. ரூ.10 லட்சத்துக்காக கொன்ற வாலிபர்.? தமிழகத்தில் சோகம்..!!
- சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!
- "ஷ்ரத்தா கொலைக்கு பிறகு Break Up செய்தோம்".. பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு.. முன்னாள் காதலன் சொன்ன திடுக்கிடும் தகவல்!!