'லவ் பண்ணுங்க சார், லைப் நல்லா இருக்கும்' ... 'Quarantine' சமயத்தில் மாடி விட்டு மாடி பறந்த காதல்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் போது தனிமைப்படுத்தப்பட்ட இருவர் மாடி விட்டு மாடி டேட்டிங்கில் ஈடுபட்ட சம்பவம் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகிலுள்ள பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் சிறிது தூரத்தை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் டோரி என்ற இளம்பெண், தனிமையில் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார். இதனைத் தனது வீட்டின் மாடியிலிருந்து கண்டு ரசித்த ஜெர்மி என்ற இளைஞர் ஒருவர் தனது போன் நம்பரை ட்ரோன் கேமரா மீது எழுதி அந்த பெண் உள்ள திசை நோக்கி பறக்க விட்டுள்ளார். நம்பர் கிடைத்த ஒரு மணி நேரத்தில் டோரியும் ஜெர்மிக்கு மெசேஜ் செய்துள்ளார். இருவரும் தொலைபேசி வழியே உரையாட ஆரம்பிக்க ஜெர்மி டோரியை டின்னருக்கு அழைத்துள்ளார்.
'Quarantine' சமயத்தில் எப்படி ஒன்றாக இருவரும் டேட்டிங் செல்ல முடியும் என டோரி யோசித்த நிலையில், இருவரும் தனி தனியாக தங்களது வீட்டு மாடிகளில் மேஜை ஒன்று தயார் செய்து டின்னர் சாப்பிடலாம் என ஜெர்மி ஆலசோனை தெரிவித்துள்ளார். அதன்படி இருவரும் தங்கள் வீட்டு மாடிகளில் மேஜை மற்றும் உணவு தயார் செய்து வீடியோ கால் மூலம் டேட்டிங் செய்து காதலில் விழுந்துள்ளனர்.
தனிமையில் இருக்கையில் அருகருகே சந்தித்து கொள்ளாமல் இருவர் காதலில் விழுந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...
- 'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...
- 'ஹை பிரசர், சுகர், கிட்னி டிஸ்ஆர்டர், ஹார்ட் பிராப்ளம்...' "மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஜாக்கிரதை..." இவர்களை 'கொரோனா' எளிதில் 'தாக்கும்'... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'
- 'கொரோனா வெறியாட்டம்...' 'பலியானோர் எண்ணிக்கை 15,372 ஆக அதிகரிப்பு...' 'உடனடி' தகவல்களை இந்த 'இணையதளத்தில்' காணலாம்...
- “இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!
- 'கொரோனாவை' கொல்லும் சிறந்த 'மருந்து' இதுதான்... இந்த மருந்தை 'உடனடியாக' பயன்படுத்துங்கள்... 'வெளிப்படையாக' அறிவித்த 'டொனால்ட் டிரம்ப்'...
- 'நீங்க பண்ண தப்புனால உலகமே கஷ்டப்படுது!'... கொந்தளித்த ட்ரம்ப்!... நடந்தது என்ன?
- "வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை...." "என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது..." 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...