90's கிட்ஸ்-க்கு தான் இவரோட அருமை தெரியும்...! 'ஒரு தலைமுறையோட நியாபகங்கள்...' - கேசட் டேப்-ஐ கண்டுபிடித்தவர் மறைந்தார்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆடியோ கேசட் டேப்பை வடிவமைத்த பொறியியலாளர் லூ ஒட்டனஸ் இன்று உலகத்தை விட்டு பிரிந்துள்ளார்.

உலகம் நவீன காலத்திற்கு மாறிய இன்றைய காலகட்டத்தில், 90களின் இறுதிவரையில் நாம் அதிகம் பயன்படுத்தி வந்தது ஆடியோ கேசட் தான் என சொன்னால் அது மிகையாகாது.

தொலைக்காட்சி அதிகம் இல்லாத அந்த கால கட்டத்தில், தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் சிங்கார சென்னை சிட்டி வரையில் ஆடியோ கேசட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது.

இந்த ஆடியோ கேசட்டை, டச்சு நாட்டை சேர்ந்த பொறியியலாளர் லூ ஒட்டனஸ் 1960 இல் பிலிப்ஸின் தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் தலைவராக ஓட்டென்ஸ் இருந்த போது அவரும் அவரது குழுவும் போர்ட்டபிள் டேப் ரெக்கார்டரை வடிவமைத்தார்கள். அதை தொடர்ந்து 1963 வாக்கில் உலகிற்கு தாங்கள் வடிவமைத்த ஆடியோ கேசட் டேப்பை காட்சிப்படுத்தினார். அதோடு அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

94 வயதான ஒட்டனஸ் சொந்த ஊரான Duizel பகுதியில் இயற்கை எய்தியுள்ளார்.

மற்ற செய்திகள்