'சின்ன வயசிலேயே கெத்தா, பந்தாவா கோடீஸ்வரியா இருந்தியேமா'... 'உனக்கா இந்த நிலைமை'... வாழ்க்கையை சில்லுசில்லாக்கிய அந்த மூன்றெழுத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாழ்க்கை யாருக்கும் எப்போதும் நிரந்தரம் அல்ல, எந்த நொடியும் வாழ்க்கை தலைகீழாக மாறலாம் என பல மனிதர்களின் வாழ்க்கை அவ்வப்போது ஒரு பாடத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் cumbria என்ற இடத்தில் அதிவேகமாக ஒரு கார் சென்றது. அளவுக்கு அதிகமான வேகத்தில் அந்த கார் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், போலீசார் அந்த காரை விரட்டி சென்று பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி அந்த காரை மடக்கிப் பிடித்தார்கள். காரின் உள்ளே இருந்தவர் அளவுக்கு அதிகமாக கொக்கைன் எடுத்திருந்தார். பின்னர் அவர் யார் என பார்த்த போது, போலீசாரே ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.

உள்ளே இருந்தவர் இங்கிலாந்து நாட்டில் மிகவும் இளம் வயதிலேயே லாட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்று கோடீஸ்வரியான  Callie Rogers. அவ்வளவு பெரிய தொகையை வென்றால் அவரது வாழ்க்கை முழுவதுமே ராணி போல வாழலாம் என்ற நிலையில், இன்று 16 வருடம் கழித்து தனது அன்றாட தேவைக்கு அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயம் போலீசாருக்கு தெரிய வந்தது. Callie Rogersயின் வாழ்க்கை எப்படி இவ்வாறு தலைகீழாக மாறியது என்பது குறித்து அவரே விவரித்துள்ளார்.

Callie Rogers சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை வாங்கிவிட்டு வெளியில் செல்லும் வாடிக்கையாளர்களைச் சோதனை செய்யும் பணியினை அவர் செய்து வந்துள்ளார். அதற்குச் சம்பளமாக 3.60 பவுண்டுகள் பெற்றுள்ளார். ஒரு நாள் விளையாட்டாக லாட்டரி சீட்டு ஒன்றை Callie Rogers வாங்க அதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

பரிசு விழுந்த சந்தோஷத்தில் ஒன்றும் புரியாமல் Callie Rogers நின்ற நேரத்தில் அவரை தேடி ஒரு காதலும் வந்தது. Nicky Lawson என்ற நபரை Callie Rogers திருமணம் செய்து கொண்டு 1,80,000 பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்றை வாங்கி அதில் கணவன் மனைவி இருவரும் குடியேறினார்கள். திருமண வாழ்க்கை சந்தோசமாகச் சென்ற நிலையில் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஆனால் அந்த சந்தோசம் ஐந்தே வருடங்களில் கசந்து போனது.

ஒரு கட்டத்தில் அவரது பிள்ளைகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டார்கள். இதனால் உடைந்து போன Callie Rogers, தன்னை இன்னும் அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்து 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பக அறுவை சிகிச்சையையும் செய்து கொண்டார். Callie Rogersக்கு பணம் வந்த பின்னர் புது புது நண்பர்கள் அவரிடம் பழக்கமாக ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அனைத்தும் Callie Rogersயின் பணத்தின் மீதே இருந்தது.

பார்ட்டி, நண்பர்கள் ஆடம்பர உடைகள், ஆடம்பர சுற்றுலா என, லாட்டரியில் ஒரு தலைமுறைக்கே தேவையான அளவு காசு கிடைத்த போதும் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலைக்குப் போனார் Callie Rogers. ஒன்றை மட்டும் தீர்க்கமாகச் சொல்லும் Callie Rogers, ''பணம் நிச்சயம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. ஆனால் அதீத பணம் நமக்குத் தேவையா என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்த போது எனக்குப் பணத் தேவை இருந்தது.

ஆனால் நிம்மதி என்ற ஒன்று எப்போதும் என்னிடம் இருந்தது. லாட்டரியில் மூலம் அவ்வளவு பணம் வந்தும் அந்த நிம்மதி மட்டும் எனக்கு இல்லாமல் போனது. கோடி கோடியாகப் பணம் வந்தாலும் நமது குணம் மட்டும் மாறாமல் இருந்தால் நிம்மதி நிச்சயம் நம்மிடம் இருக்கும். நான் இப்போது தான் எனது பழைய வாழ்க்கைக்கு வந்துள்ளதாக உணர்கிறேன். இந்த நிம்மதி எனக்கு வேண்டும்'' என உருக்கத்துடன் Callie Rogers கூறியுள்ளார்.

பணம் என்ற மூன்றெழுத்து ஒருவரின் வாழ்க்கையை எப்படி எல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் Callie Rogers.

மற்ற செய்திகள்