"அந்த மாதிரி பண்றவங்கள அங்கயே சுட்டுத் தள்ளுங்க!" - டிரம்ப்பின் வெடிகுண்டு வார்த்தைகளால் 'வெடிக்கும் போராட்டம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து கடந்த திங்கட்கிழமை  போலீஸார் கைது செய்தனர்.

Advertising
Advertising

ஆனால் கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில், போலீஸாரின் பிடியிலிருந்தபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, போராட்டங்களை  கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் ராணுவத்தை அனுப்பியுள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்