லண்டனில் தண்ணீரில் மூழ்கடித்து மகனைக் கொன்ற பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? பிரேத பரிசோதனையில் இருந்த ‘புதிய’ உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி  7 வயது மகன் Timur மற்றும் அவனது தாய் Yulia Gokcedag (35) இருவரும் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இறுதியில் அப்பெண்மணியின் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த போது, போலீஸார் அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்றைக் கண்டனர்.

அதன்படி, Yulia Gokcedag தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க அவருக்கு அவரது மகன் இறந்து கிடந்துள்ளான்.  சிறுவன் தண்ணீரில் அமுக்கி கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.  இதேபோல் Yulia Gokcedag மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Yulia Gokcedag-வின் தோழி இதுபற்றி பேசும்போது, கடந்த மாதம்தான் அவரை மருத்துவமனையில் பார்த்ததாகவும், ஆனால் அப்போதும் கூட அவர் இப்படியான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் இப்போதுதான் அதற்கான புரிகிறது என்றும் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

முன்னதாக வித்தியாசமான மரபணுக் குறைபாட்டால பாதிக்கப்பட்டு, முரட்டுத்தனமாக அவ்வப்போது மாறும் தன்மை கொண்ட தனது 7 வயது மகனை பார்த்துக்கொள்ள முடியாமல், Yulia Gokcedag தண்ணீரில் அமுக்கிக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்