'அப்பாவிடம் இருந்து மகளுக்கு வந்த நோய்'... 'குடும்பத்தை காணமுடியாமல் பட்ட வேதனை'... ஆனா உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்த ஒரே ஒரு ஊசி !
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவ ரீதியாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வந்த சிறுமி ஒருவர் தற்போது தடுப்பூசியால் நிம்மதி அடைந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் Muswell Hill பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் ரிச். 16 வயதான இந்த சிறுமிக்கு 'Inherited Spherocytosis' காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படும் அச்சம் கடுமையாக இருந்தது. இவருடைய தந்தையிடம் இருந்து இந்த நோய் வந்த நிலையில், எஸ்தரின் 5 வயதிலேயே அவருடைய மண்ணீரல் அகற்றப்பட்டது. சிறு வயதிலேயே இந்த பாதிப்புகளைச் சந்தித்த அவர், ஒவ்வொரு நாளையும் மிகுந்த எச்சரிக்கையுடனே கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேநேரத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த சூழ்நிலையில், உடலின் முக்கிய பாகமான மண்ணீரல் அகற்றப்பட்டதால் மருத்துவ ரீதியாக எஸ்தர் கொரோனாவால் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் கடந்த ஒரு வருடமாகத் தனது பாட்டி, நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் பார்க்காமல் தனிமையிலிருந்து வந்த அவருக்கு தற்போது தடுப்பூசி பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கடும் உற்சாகத்தோடு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட எஸ்தர், ஒரு வருடமாக நான் பட்ட வேதனைக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இனிமேல் எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த பயம் தேவையில்லை எனவும், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனது நண்பர்களோடு சுற்றுலா செல்ல முடியும் என உற்சாகத்தோடு கூறியுள்ளார். பாட்டியைப் பார்க்க முடியாமல் தவித்த எனக்கு, தற்போது அந்த கவலை என்னை விட்டுச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே மண்ணீரல் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது ரத்த அணுக்களைக் கட்டுப்படுத்துகிறது. அதேநேரத்தில் மண்ணீரல் அகற்றப்பட்டால் அதன் செயல்பாடுகளைக் கல்லீரல் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் கடுமையான நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: இன்னும் ஏதாவது பேரழிவு வர சான்ஸ் இருக்கா...? 'பில்கேட்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி...' - இடியென இறங்கிய 'அந்த' பதில்...!
- 'இப்போ பாக்குற வேலை வேண்டாம்'... 'புதிய வேலைக்கு தாவுவோம்'... இந்தியர்களின் முடிவுக்கு என்ன காரணம்!
- 'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
- 'எந்த தாய்க்கும் என்னோட கஷ்டம் வர கூடாது'... 'பிறந்த குழந்தையை கொஞ்ச முடியாத நிலை'... 3 மாதம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!
- கொரோனா பரிசோதனை செய்ய.. நோயாளிகளை பொய் கூற வைப்பதாக வெளிப்படையாக கூறிய மருத்துவர்! ‘பரபரப்பு’ பின்னணி!
- Video: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!
- 'தமிழகத்தின்' இன்றைய (04-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'தமிழகத்தின்' இன்றைய (03-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'இந்த 20' நாடுகளில் உள்ள பயணிகள்... 'எங்க நாட்டுக்குள்ள வர தடை...' 'இருபதுல இந்தியாவும் ஒண்ணு...' - அதிரடி உத்தரவிட்ட வளைகுடா நாடு...!