சும்மா நின்னுட்டு இருந்தா போதும்.. டெய்லி 16,000 ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்.. இப்படியும் ஒரு வேலையா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன்: பொதுவாக நமக்கெல்லாம் பலமணி நேரம் வரிசையில் நின்று ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் பொறுமையை இழந்து விடும் நிலைக்கு சென்று விடுவோம்.

Advertising
>
Advertising

ஆனால் லண்டனை சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் கடந்த மூன்று ஆண்டுகளாக வரிசையில் நின்றே தினமும் சுமார் ரூ.16,000 சம்பாதித்துக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும்.

160 பவுண்ட்கள் வரை சம்பாதிப்பு:

லண்டன் நகரில் ஃபுல்ஹாம் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட்டி அடிப்படையில் வரலாற்றுக் கதை ஆசிரியர். ஆனால், லண்டன் மக்களோ அவரைப் பற்றி ப்ரொஃபஷனல் க்யூயர் என்றே அழைக்கிறார்கள். ஃப்ரெட்டி அவர்களின் பெரும்பாலான க்ளையன்டுகள் பலர் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டியவர்களாகவும், வயதானவர்களாகவும், இன்னும் சிலர் வரிசையில் நிற்க முடியாத செல்வந்தர்களாம். அதன் காரணமாகவே ஃப்ரெட்டி தினமும் 160 பவுண்ட்கள் வரை சம்பாதிக்கிறாராம்.

8 மணி நேரம் வரை வரிசையில் நிற்பேன்:

இதுக்குறித்து தி சன் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில், 'என்னுடைய 60 வயது க்ளையன்ட்டுகள் சிலருக்காக நான் சுமார் 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றுள்ளேன். என்னுடைய வேலையே வரிசையில் நிற்பது தான். அதுவும் கிறுத்துமஸ் மாதம் எல்லாம் பிஸியாக இருப்பேன்.

அதுமட்டுமில்லாமல் அப்பல்லோ தியேட்டர்ஸில் நடைபெறும் மிகப் பெரிய இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் பெறு வரிசையில் நின்றிருக்கிறேன். டிக்கெட் வாங்க அதிகபட்சமாக 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

நான் ஒரு எழுத்தாளன்:

ஒரு சிலருக்காக டிக்கெட் வாங்கிவிட்டு தாங்கள் வரும் வரை உள்ளே செல்வதற்கான வரிசையில் நிற்குமாறு கூறுவார்கள். அதற்காக மணிக்கு 20 பவுண்ட் தருவார்கள்' எனக் கூறினார். அதோடு 'நான் ஒரு எழுத்தாளன் என்பதால் இந்த வேலை எனக்கு சௌக்கரியமாக இருக்கிறது. நான் வேலை தேடினேன். அப்போதுதான் இப்படியான சிறு வேலைகளைப் பற்றி, எந்தத் திறமையுமே தேவைப்படாத வேலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இன்று அன்றாடம் ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் சம்பாதிக்கிறேன். இனிமேல் இதில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. குறிப்பாக நான் நினைக்கும் நேரத்தில் வேலை செய்கிறேன். நினைக்கும் நாளில் செய்கிறேன். எழுதுவதற்கான நேரத்தை என்னால் நிர்ணயிக்க முடிகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ஃப்ரெட்டி தனது வேலை பற்றி https://www.taskrabbit.co.uk/ டாஸ்க் ரேபிட் என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

LONDON, RS 16, 0, வரிசை, லண்டன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்