மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன்: பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு முயன்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் சிறை சரியில்லை, கழிவறை சரியில்லை என்று ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தியா வருவதை மல்லையா தவிர்த்துவருகிறார். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
கொடுத்த கடனில் இருந்து கிடைத்த ஒரு பகுதி:
இந்திய வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ 9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அரசு வங்கிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் இவ்வங்கிகள் கொடுத்த கடனில் ஒரு பகுதி கிடைத்திருக்கிறது.
அமலாக்கத்துறை இதுவரை இவர்களின் ரூ.18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறது. வங்கிகள் கொடுத்த கடனான ரூ.22,585.23 கோடியில் இது 80.45% ஆகும்.
சொகுசு பங்களா மீது சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன்:
இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன் பெற்றிருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால் 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.
பங்களாவை விட்டு வெளியேறுங்கள்:
இதனையடுத்து, சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்த வருடம் அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லண்டன் சொகுசு பங்களாவை விட்டு மல்லையா தனது குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்றும், அதோடு மட்டுமல்லாமல் சுவிஸ் வங்கியிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சும்மா நின்னுட்டு இருந்தா போதும்.. டெய்லி 16,000 ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்.. இப்படியும் ஒரு வேலையா!
- 190 வயதில் கின்னஸ் சாதனை... ஜொனாதன் ஆமைக்கு குவியும் பாராட்டுகள்
- விஜய் மல்லையா, நிர்வ மோடி... தப்பிய தொழிலதிபர்களிடம் எவ்வளவு வசூல் தெரியுமா?
- '45 வயதில் கல்யாண வாழ்க்கைக்கு குட்பை சொன்ன பெண்'... 'ஆனா விவாகரத்துக்கு பின் இப்படி ஒரு சம்பவமா'?... 'மேடம், எங்க மனசு நொறுங்கி போச்சு'... நொந்துபோன 90ஸ் கிட்ஸ்!
- என் வாழ்க்கையே போச்சு...! 'நான் சொல்றத நம்ப மாட்டீங்கனு தெரியும்...' 'ஆனாலும் என் நிலைமைய சொல்றேன்...' - 'ஐ.எஸ்' அமைப்பில் இணைந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி...!
- 'Snacks பாக்கெட்குள் ஊசியை செலுத்திய நபர்'... 'அந்த ஊசிக்குள் இருந்த அருவருப்பான பொருள்'... அந்த சூப்பர் மார்க்கெட்ல வாங்குனதை தூக்கி போடுங்க!
- ஹாய்...! 'லண்டன்ல இருந்து தான் பேசுறேன்...' நாம ஒரு தடவ 'மீட்' பண்ணிருவோமா...? வந்துட்டேன்னு, ஏர்போர்ட்ல இருந்து வந்த போன்கால்...' - பக்காவா பிளான் பண்ணி நடந்த மோசடி...!
- 'வக்கீலுக்கு ஃபீஸ் கொடுக்க...' 'கையில சுத்தமா காசு இல்லங்க...' - இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விஜய் மல்லையா...!
- ‘ஆன்லைனில் ஆர்டரா?’.. தமிழகத்தையே உறைய வைத்த சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ‘பரபரப்பு’ திருப்பம்!
- ‘ஒருவரின் ஆடை மீது தொட்டு பாலியல் தொல்லை அளிப்பது’.. ‘போக்சோ சட்டத்தின் கீழ் வராது!’ - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!